Are "Namuth" and "Eheth" truly absent in spoken Sinhala?
Are "Namuth" and "Eheth" truly absent in spoken Sinhala?
அர்த்தம், பயன்பாடுகள், உதாரணங்கள் மற்றும் பயிற்சிகள்.
“නමුත්” மற்றும் “එහෙත්”
அர்த்தம்
“නමුත්” மற்றும் “එහෙත්” என்ற இரண்டு சொற்களும் எதிர்மறை கருத்துக்களை அல்லது மாறுபட்ட கருத்துக்களை காட்ட பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கிலத்தில் இச் சொற்கள் “but /
however” என்பதற்கு சமனானவை. சிங்கள மொழியில் இச் சொற்கள் பயன்படுத்தப்படும் நிலைகள் சற்று வித்தியாசமானவை.
பயன்பாடு
ஒரு வாக்கியத்தின் முதல் கருத்துக்கு எதிராக இரண்டாவது கருத்தை அமையும்போது அந்த இரு விடயங்களையும் இணைத்துச் சொல்வதற்கு “නමුත්” அல்லது “එහෙත්” என்ற சொற்களை சிங்கள மொழியில் பயன்படுத்துகிறோம்.
නමුත්
அன்றாட பேச்சு மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும் சொல் நமுத் எனப்படும் சொல் ஆகும். இது எளிய மற்றும் பொதுவான சொல் ஆகும். பேச்சுச்
சிங்களம் கற்கும் உங்களுக்கு இது மிக அவசியமானது.
உதாரணங்கள்:
1.நான் பள்ளிக்கு சென்றேன், නමුත් ஆசிரியர் இல்லை.
2.அவள் புத்தகம் படிக்கிறாள், නමුත් எழுத விரும்பவில்லை.
1.
මම පාඩම් කළා, නමුත් විභාගය අමාරුයි.
நான் படித்தேன், ஆனால் தேர்வு கடினமாக இருந்தது.
2.
ඇය ගායනා කරයි, නමුත් නර්තනය නොකරයි.
அவள் பாடுகிறாள், ஆனால் நடனம் ஆடவில்லை.
3.
ඔහු කඩයට ගියා, නමුත් කිසිවක් ගත්තේ නැහැ.
அவன் கடைக்குச் சென்றான், ஆனால் எதையும் வாங்கவில்லை.
4.
අද අහස පැහැදිලිය, නමුත් වැසි වැටුණා.
இன்று வானம் தெளிவாக இருந்தது, ஆனால் மழை பெய்தது.
5.
මට කෝපි ඕනේ, නමුත් තේ තියෙනවා.
எனக்கு காபி வேண்டும், ஆனால் தேநீர் தான் இருக்கிறது.
இது சிறிது உயர்ந்த அல்லது எழுத்து மொழிக்கு பயன்படும் சொல்
என நாம் எடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் கட்டுரைகள், கதைகள், அதிகாரப்பூர்வ எழுத்துகளில் இச்சொல் பயன்படும்
உதாரணங்கள்:
1.அவன் முயற்சி செய்தான், එහෙත් வெற்றி பெறவில்லை.
2.இன்று மழை பெய்கிறது, එහෙත් நாங்கள் பயணம் செய்வோம்.
එහෙත්
1.
ඔහු දුර්වලය, එහෙත් උත්සාහශීලිය.
அவன் பலவீனமானவன், எனினும் முயற்சியுள்ளவன்.
2.
ඇය ලස්සනයි, එහෙත් අහංකාර නැහැ.
அவள் அழகானவள், எனினும் அகந்தை இல்லை.
3.
ගම දුරයි, එහෙත් අපි යන්නෙමු.
கிராமம் தூரமாக உள்ளது, எனினும் நாம் செல்வோம்.
4.
ඔවුන් දුප්පත්ය, එහෙත් ඔවුන් සතුටින් ජීවිතය ගත කරති. அவர்கள் ஏழைகள், எனினும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
5.
වැසි වැඩිය, එහෙත් ගංවතුර නැහැ.
மழை அதிகம், எனினும் வெள்ளம் இல்லை.
பயிற்சி
1.எனக்கு சிங்களம் பிடிக்கும், _______ அது கொஞ்சம் கடினம்.
2.அவன் ஏழை, _______ அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
3.எனக்குப் பசிக்கின்றது,___________ நான்
சாப்பிடவில்லை.
4.வானம் மேகமூட்டமாகக் காணப்படும்,_______ மழை
பெய்யாது.
Comments
Post a Comment