Posts

Showing posts with the label Sinhala Alphabets

சிங்கள உயிர் எழுத்துக்கள் (ප්‍රාණාක්‍ෂර)

Image
சிங்கள உயிர் எழுத்துக்கள் (ප්‍රාණාක්‍ෂර) சிங்கள மொழியை சரியாக புரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் அடிப்படையில் எழுத்துக்களிலிருந்து தொடங்குவதே மிகச் சிறந்த வழியாகும். சிங்கள மொழியில் எழுத்துக்கள் இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன: பிராணா க்ஷர / பணகுரு (ප්‍රාණාක්‍ෂර / පණකුරු) – உயிர் எழுத்துக்கள் காத்ரா க்ஷர / கதகுரு (ගාත්‍රාක්‍ෂර / ගතකුරු) – மெய் எழுத்துக்கள் இன்றைய பதிவில், தமிழ் உயிர் எழுத்துக்களைப் போன்றே அமைந்த 12 முக்கிய சிங்கள உயிர் எழுத்துக்களையும் , அவற்றைக் கொண்டு தொடங்கும் சில அன்றாட பயன்பாட்டுச் சொற்களையும் பார்ப்போம்!

Sinhala letters writing methods / சிங்கள எழுத்துக்கள் எழுதும் முறை

Image
Sinhala letters writing methods / சிங்கள எழுத்துக்கள் எழுதும் முறை சிங்கள மொழி பற்றியும் அதன் அடிப்படைகள் பற்றியும் தொடர்ச்சியாக கற்று வருகின்றோம். அந்த வரிசையில் இப்பகுதியில்  சிங்கள எழுத்துக்களை எவ்வாறாக எழுதுவது என்ற அடிப்படையை சில எழுத்துக்களின் துணை கொண்டு கற்போம்.  இந்த அடிப்படைகள் உங்களுக்கு எழுத்துக்களை எழுதி பயிற்சி செய்ய உதவி புரியும், மற்றும் எழுத்துக்களை எவ்வாறாக எழுதுவது என்ற அடிப்படையை வழங்கும். சிங்கள எழுத்துக்களை எழுதுவதற்காக சில அடிப்படை விதிமுறைகள் காணப்படுகின்றன. சிங்கள எழுத்துக்கள் அடிப்படையாக வட்ட வடிவான அமைப்பில் எழுதப்படக்கூடியவை. இந்தப் பகுதியில் நாம் ஏற்கனவே கற்ற எழுத்துகளை எழுதுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகளை எழுதிப் பயிற்சி செய்வது சிறந்த பலனைத் தரும்.

Sinhala Alphabets in Tamil/ சிங்கள உயிர் எழுத்துக்கள் தமிழில்

Image
Sinhala Alphabets in Tamil/ சிங்கள உயிர் எழுத்துக்கள் தமிழில்  தமிழில் உள்ளதைப்போன்றே சிங்கள மொழியிலும் உயிர் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவை அடிப்படை எழுத்துக்களாகவும், மிக முக்கியமான ஆரம்ப எழுத்துக்களாகவும் உள்ளன. இவற்றை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்வதன் ஊடாக இலகுவாக ஏனைய சிங்கள எழுத்துக்களிலும் தேற்ச்சி பெற்று இலகுவாக சிங்கள மொழியை கற்கலாம். உங்களுக்கு இலகுவாக புரியத்தக்க வகையில் கீழே சிங்கள மொழியில் காணப்படும் உயிர் எழுத்துக்களிற்கு ஒப்பான தமிழ் எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன. இதன் உச்சரிப்பு தொனியை அறிந்து கொள்ள எமது வீடியோவை பார்வையிடுவதன் ஊடாக மேலதிக புரிதலை பெற்றுக்கொள்ளுங்கள். අ- அ ආ- ஆ  ඇ- அ(எ)  (சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்து) ඈ- ஆ   (ஏ) (சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்து) ඉ- இ ඊ- ஈ උ- உ ඌ- ஊ එ- எ ඒ- ஏ ඔ- ஒ ඕ- ஓ ඖ- ஔ අං- அங் ඇ- அ(எ),  ඈ- ஆ(ஏ)  என்பவை சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்துக்கள் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். இவ் எழுத்துக்கள் தமிழில் காணப்படுவதில்லை. ஆனால் சிங்கள மொழியில் உள்ளன. சிங்கள மொழி எனப்படுவது இ...