Posts

Showing posts with the label Second Language Sinhala

சிங்கள வரிசை எண்கள் (Ordinal Numbers)

Image
சிங்கள வரிசை எண்கள் (Ordinal Numbers)  சிங்கள மொழியை வாசிப்பதிலும் பேசுவதிலும், வரிசை எண்கள் (Ordinal Numbers) மிக முக்கியமானவை. பொதுவாக, first, second, third போன்ற சொற்கள் ஓர் தானத்தின் “இடத்தை” அல்லது “வரிசையை” குறிக்கின்றன. உதாரணமாக முதலாம் இடம், நான்காவது வரிசை, எட்டாவது நபர், ஆறாவது புகையிரத நிலையம் என இவற்றை எமது தினசரி நாட்களில் பயன்படுத்துகின்றோம்.  இவை எண்ணிக்கையை  (Number countings)   அல்ல, மாறாக  முடிவிடத்தை அல்லது தரத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சிங்கள மொழியிலும் இதேபோல் தனித்துவமான வரிசை எண்கள் உள்ளன. இவற்றை கற்றுக்கொள்வது தினசரி உரையாடல்களில், கல்வி, தேதி, விளையாட்டு, பட்டியல் வரிசை போன்ற சூழல்களில் எமது தேவையை நிறைவேற்ற மிகவும் உதவும். சிங்கள வரிசை எண்கள் – அறிமுகம் சிங்களத்தில் Ordinal Numbers என்பதற்கு:  veni lesa yedena aṁka – වෙනි ලෙස යෙදෙන අංක- வெனி லெச யேதென அங்க எனஅதாவது தமிழில்: “வரிசையை வெளிப்படுத்தும் எண்கள்” என குறிப்பிடப்படுகின்றன. இவை எதற்குப் பயன்படுத்தப்படுகின்றன? ஒருவரின் தரவ...

Basic Sinhala Sentences Making

Image
Basic Sinhala Sentences Making  சிங்கள மொழியை பொறுத்த அளவில் வசனங்களை உருவாக்குவது மிக இலகுவானது. குறிப்பாக இரண்டு வாக்கியங்களை மாத்திரம் பயன்படுத்தி அர்த்தமுள்ள வசனங்களை உருவாக்கிவிட முடியும். இவ்வாறாக எளிமையான வசனங்களை உருவாக்கி கதைப்பதற்கும், எழுதுவதற்கும் நீங்கள் சிங்களச் சொற்களை அதுவும் அடிப்படைச் சொற்களை தெரிந்து வைத்திருப்பதே போதுமானது.  பின்வரும் உதாரணங்களைக் கவனித்துப் பாருங்கள்.  මම යනවා - மம யனவா- நான் போகின்றேன் අපි යනවා - அபி யனவா-நாங்கள் போகின்றோம் ඔයා යනවා- ஓயா யனவா- நீ போகின்றாய் ඔයාලා යනවා - ஓயாலா யனவா- நீங்கள் போகின்றீர்கள் රවි යනවා - ரவி யனவா- ரவி போகின்றான் මාලා යනවා - மாலா யனவா- மாலா போகின்றாள் එයා යනවා - எயா யனவா- அவர் போகிறார்  ඒගොල්ලෝ යනවා - ஏகொல்லோ யனவா- அவர்கள் போகிறார்கள் இவ்வாறாக இரண்டு வசன அமைப்பிலேயே ஓர் கருத்துள்ள வசனம் உருவாக்கப்படுகின்றது.  கீழே உள்ள இரு வசனங்களையும் கவனித்துப் பாருங்கள். இதில் ஓர் மிக முக்கியமான விதியை உங்களுக்கு நான் குறிப்பிட முயல்கின்றேன். அது யாதெனில் தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் ஓர் வினைச்சொல்லை குறிப...

Places names in Sinhala to Tamil

Image
Places names in Sinhala to Tamil பொதுவாக தமிழ் மொழி பெயர்கள் சிங்கள மொழியில் வரும்போது சற்றே மாற்றமடைவது பொதுவானது. இந்தப் பகுதியில் நாம் குறிப்பாக இலங்கையில் உள்ள சில இடங்களின் பெயர்களைப் பற்றிப் பார்க்கலாம். குறிப்பாக சில வித்தியாசமான உச்சரிப்புக்களை உடைய இடங்களின் பெயர்களை சிங்கள மொழியிலும், அதை தொடர்ந்து சிங்கள மொழியை எவ்வாறு தமிழில் உச்சரிப்பது போன்று தமிழ் உச்சரிப்பிலும், இறுதியாக தமிழ் அர்த்தத்தையும் காண்போம். இவை நாம் அன்றாடம் உபயோகிக்கும் இடங்களின் பெயர்களாகும். இவை உங்களது அன்றாட தேவைப்பாட்டிற்கு உதவியாக அமையும்.  කොළඹ - கொலம்ப - கொழும்பு මහනුවර - மஹநுவர - கண்டி කතරගම - கத்தரகம - கதிர்காமம் යාපනය - யா(ப்)பனய - யாழ்பாணம் පේදුරුතුඩුව - பேதுரு(த்)துடுவ - பருத்தித்துறை අලිමංකඩ - அலிமங்கட - ஆனையிரவு ත්‍රිකුණාමලය - த்ரி(க்)குணாமலய - திருகோணமலை කොටුව - கொ(ட்)டுவ - கோட்டை පිටකොටුව - பி (ட்)டகொ(ட்)டுவ - புறக்கோட்டை හලාවත - ஹலாவ(த்)த - சிலாபம் මීගමුව -மீகமுவ- நீர்கொழும்பு පුරහල -புரஹல் -நகரமண்டபம் පාර්ලිමේන්තුව -பார்லிமேன்த்துவ- பாராளுமன்றம்

Sinhala Alphabets in Tamil/ சிங்கள உயிர் எழுத்துக்கள் தமிழில்

Image
Sinhala Alphabets in Tamil/ சிங்கள உயிர் எழுத்துக்கள் தமிழில்  தமிழில் உள்ளதைப்போன்றே சிங்கள மொழியிலும் உயிர் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவை அடிப்படை எழுத்துக்களாகவும், மிக முக்கியமான ஆரம்ப எழுத்துக்களாகவும் உள்ளன. இவற்றை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்வதன் ஊடாக இலகுவாக ஏனைய சிங்கள எழுத்துக்களிலும் தேற்ச்சி பெற்று இலகுவாக சிங்கள மொழியை கற்கலாம். உங்களுக்கு இலகுவாக புரியத்தக்க வகையில் கீழே சிங்கள மொழியில் காணப்படும் உயிர் எழுத்துக்களிற்கு ஒப்பான தமிழ் எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன. இதன் உச்சரிப்பு தொனியை அறிந்து கொள்ள எமது வீடியோவை பார்வையிடுவதன் ஊடாக மேலதிக புரிதலை பெற்றுக்கொள்ளுங்கள். අ- அ ආ- ஆ  ඇ- அ(எ)  (சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்து) ඈ- ஆ   (ஏ) (சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்து) ඉ- இ ඊ- ஈ උ- உ ඌ- ஊ එ- எ ඒ- ஏ ඔ- ஒ ඕ- ஓ ඖ- ஔ අං- அங் ඇ- அ(எ),  ඈ- ஆ(ஏ)  என்பவை சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்துக்கள் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். இவ் எழுத்துக்கள் தமிழில் காணப்படுவதில்லை. ஆனால் சிங்கள மொழியில் உள்ளன. சிங்கள மொழி எனப்படுவது இ...

Basic Sinhala grammar in Tamil

Image
Basic Sinhala grammar in Tamil Basic Spoken Sinhala in Tamil சிங்கள மொழியில் தமிழ் மொழியைப்போன்றே பல்வேறு வசனங்களும் பல்வேறு வகையான இணைப்புச் சொற்களும் காணப்படுகின்றன.  இப்பகுதி சிங்களமொழிப் பயிற்சி முறைமையில் ஒரு முக்கிய பகுதியாகும். இது வரை நீங்கள் பல்வேறுவிதமான வார்த்தைகளை பயிற்சி செய்து இருப்பீர்கள். பல்வேறு வசனங்களை கேள்வியுற்றும் இருப்பீர்கள். வாக்கியங்களை பயிற்சி செய்த நீங்கள் இப்பகுதியிலிருந்து தர்க்க ரீதியாக சிங்களமொழி பேசுவதற்கான பயிற்சியில் ஈடுப்பட போகிறீர்கள் . இப்பகுதியில் பெறும் பயிற்சியானது எச்சந்தர்ப்பத்திலும் சிங்களமொழி உரையாடலை புரிந்துக் கொள்ளவும் தர்க்கரீதியாக உங்கள் கருத்துக்களை சொல்லவும் உங்களுக்கு பெரும் துணையாகமையும் என்பது உறுதி. இப்பகுதியில் ஆனால் மற்றும் ஆயினும் ஆகிய இரு சொற்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றியும் நீங்கள் கற்கப்போகிறீர்கள். இவை சிங்கள மொழியை நீங்கள் இலகுவாக விளங்கிக்கொள்வதற்கும் இலகுவாக  கதைப்பதற்கும் உங்களுக்கு உதவி புரியும். காரணம் நாம் எத்தனை வசனங்களையும் மனனம் செய்துகொள்ள முடியும். ஆயினும் கற்றுக்கொண்ட வசனங்களை ...

Second Language Sinhala Learning Motivation

Image
Second Language Sinhala Learning Motivation நீங்கள் ஏன் சிங்களம் கற்க வேண்டும்? இந்த கேள்விக்கு உங்களிடம் பல பதில்கள் இருக்கலாம், ஆனால் ஒரு சில பதில்கள் அனைவருக்கும் பொருந்தும். சிங்களம் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு புதிய கலாச்சாரம் சார் உலகத்திற்கான திறவுகோல் ஆகும். இரண்டாம் மொழி சிங்களம் கற்பதனால் ஏற்படும் சில பயன்களை பார்ப்போம். 1. கலாச்சாரத்தை இணைத்தல்: இலங்கையில், சிங்களம் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளும் முக்கியமானவை. சிங்களம் கற்பதன் மூலம், நீங்கள் சிங்கள கலாச்சாரத்தை, அவர்களின் பழக்கவழக்கங்களை, கலை மற்றும் இலக்கியத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். இது இரு இனங்களுக்குமிடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்த உதவும். 2. வேலை வாய்ப்புகள்: இலங்கையில் பல துறைகளில் சிங்கள மொழி அவசியம். சிங்களம் தெரிந்திருந்தால், நீங்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம் அல்லது உங்கள் தற்போதைய வேலையில் முன்னேறலாம். உதாரணமாக, சுற்றுலா, வணிகம் அல்லது அரசு சேவைகளில் சிங்கள மொழி அறிவு ஒரு பெரிய நன்மை தருவிக்கும் திறவுகோலாக உள்ளது. 3. அன்றாட வாழ்க்கை: நீங்கள் இலங்கையின் எந்தப் பகுதிக்கும் பயணம் செய்யும்போது, சிங்களம் தெரிந...