Followers

Sinhala letters writing methods / சிங்கள எழுத்துக்கள் எழுதும் முறை

Sinhala letters writing methods / சிங்கள எழுத்துக்கள் எழுதும் முறை

சிங்கள மொழி பற்றியும் அதன் அடிப்படைகள் பற்றியும் தொடர்ச்சியாக கற்று வருகின்றோம். அந்த வரிசையில் இப்பகுதியில்  சிங்கள எழுத்துக்களை எவ்வாறாக எழுதுவது என்ற அடிப்படையை சில எழுத்துக்களின் துணை கொண்டு கற்போம். 

இந்த அடிப்படைகள் உங்களுக்கு எழுத்துக்களை எழுதி பயிற்சி செய்ய உதவி புரியும், மற்றும் எழுத்துக்களை எவ்வாறாக எழுதுவது என்ற அடிப்படையை வழங்கும்.

சிங்கள எழுத்துக்களை எழுதுவதற்காக சில அடிப்படை விதிமுறைகள் காணப்படுகின்றன. சிங்கள எழுத்துக்கள் அடிப்படையாக வட்ட வடிவான அமைப்பில் எழுதப்படக்கூடியவை.

இந்தப் பகுதியில் நாம் ஏற்கனவே கற்ற எழுத்துகளை எழுதுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த எழுத்துகளை எழுதிப் பயிற்சி செய்வது சிறந்த பலனைத் தரும்.

சிங்கள எழுத்துக்கள்
உரு-01

உரு-01 ஐ கவனித்துப் பாருங்கள். இந்த உரு-01 இல் நான்கு எழுத்துக்களின் எழுதும் முறைகள் தரப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்கள் முறையே ම, ක, හ, ජ எனும் ம, க, க(Ha), ய(ya) எனும் உச்சரிப்புக்களைக் கொண்ட எழுத்துக்களாகும்.
ම - ம
ක - க
හ - க(Ha) 
ජ - ய(ya) 


மேலே தரப்பட்ட எழுத்துக்களை முறையே தரப்பட்டுள்ள அம்புக்குறிகள் செல்லும் வழியே எழுதிப் பயிற்சி செய்து கொள்ளுங்கள். கீழே தரப்பட்ட லிங்கை கிளிக் செய்து பயிற்சிக்காக எழுத்துக்களை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.






சிங்கள எழுத்துக்கள்
உரு-02


உரு-02 ஐ கவனித்துப் பாருங்கள். இந்த உரு-02 இல் நான்கு எழுத்துக்களின் எழுதும் முறைகள் தரப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்கள் முறையே ප, ර, බ, ල  எனும் ப, ர, ப(Ba), ல எனும் உச்சரிப்புக்களைக் கொண்ட எழுத்துக்களாகும்.

ප - ப
ර - ர
බ - ப(Ba)
ල - ல




Sinhala letters
உரு-03

உரு-03 ஐ கவனித்துப் பாருங்கள். இந்த உரு-03 இல் நான்கு எழுத்துக்களின் எழுதும் முறைகள் தரப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்கள் முறையே ද, උ, න, ස  எனும் த(dha), உ, ன, ச எனும் உச்சரிப்புக்களைக் கொண்ட எழுத்துக்களாகும்.


ද - த(dha)
උ - உ
න - ச
ස - ன



Sinhala letters in Tamil
உரு-04

உரு-04 ஐ கவனித்துப் பாருங்கள். இந்த உரு-04 இல் நான்கு எழுத்துக்களின் எழுதும் முறைகள் தரப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்கள் முறையே ග, ත, අ, ව  எனும் க(ga), த, அ, வ எனும் உச்சரிப்புக்களைக் கொண்ட எழுத்துக்களாகும்.


ග - க(ga)
ත - த
අ - அ
ව - வ

மேலே தரப்பட்ட எழுத்துக்களை முறையே தரப்பட்டுள்ள அம்புக்குறிகள் செல்லும் வழியே எழுதிப் பயிற்சி செய்து கொள்ளுங்கள். கீழே தரப்பட்ட லிங்கை கிளிக் செய்து பயிற்சிக்காக எழுத்துக்களை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



Sinhala letters writing method
உரு-05

உரு-05 ஐ கவனித்துப் பாருங்கள். இந்த உரு-05 இல் நான்கு எழுத்துக்களின் எழுதும் முறைகள் தரப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்கள் முறையே ට, ය, ඩ, ඉ  எனும் ட(da), ய, ட, இ எனும் உச்சரிப்புக்களைக் கொண்ட எழுத்துக்களாகும்.

ට - ட(da)
ය - ய
ඩ - ட
ඉ - இ



சிங்கள எழுத்து எழுதும் முறை
உரு-06

உரு-06 ஐ கவனித்துப் பாருங்கள். இந்த உரு-06 இல் நான்கு எழுத்துக்களின் எழுதும் முறைகள் தரப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்கள் முறையே ණ, ආ, ළ, ඇ   எனும் ண, ஆ, ள, அ(ay) எனும் உச்சரிப்புக்களைக் கொண்ட எழுத்துக்களாகும்.

ණ - ண
ආ - ஆ
ළ - ள 
ඇ - அ(ay)

சிங்களம் கற்போம்
உரு-07

உரு-07 ஐ கவனித்துப் பாருங்கள். இந்த உரு-07 இல் நான்கு எழுத்துக்களின் எழுதும் முறைகள் தரப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்கள் முறையே ඔ, ඈ, ඊ, ඌ,    எனும் ஒ, அ (aay), ஈ, ஊ எனும் உச்சரிப்புக்களைக் கொண்ட எழுத்துக்களாகும்.


ඔ - ஒ
ඈ - அ (aay)
ඊ - ஈ
ඌ - ஊ





சிங்கள எழுத்துப் பயிற்சி
உரு-08

உரு-08 ஐ கவனித்துப் பாருங்கள். இந்த உரு-08 இல் நான்கு எழுத்துக்களின் எழுதும் முறைகள் தரப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்கள் முறையே එ, ච, ඒ, ඕ     எனும் எ, ச (Cha), ஏ, ஓ எனும் உச்சரிப்புக்களைக் கொண்ட எழுத்துக்களாகும்.

එ - எ
ච - ச (Cha) 
ඒ - ஏ
ඕ - ஓ

மேலே தரப்பட்ட எழுத்துக்களை முறையே தரப்பட்டுள்ள அம்புக்குறிகள் செல்லும் வழியே எழுதிப் பயிற்சி செய்து கொள்ளுங்கள். கீழே தரப்பட்ட லிங்கை கிளிக் செய்து பயிற்சிக்காக எழுத்துக்களை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்களுக்கு ஓர் சந்தேகம் எழுந்திருக்கக்கூடும். சிங்கள மொழியில் உள்ள ஒட்டுமொத்த எழுத்துக்களையும் எழுதிப் பழக இந்த அடிப்படை மட்டும் போதுமானதா என நீங்கள் சிந்திக்கக்கூடும். சிங்கள மொழியில் உள்ள மொத்த எழுத்துக்களையும் கவனித்துப்பாருங்கள். அவை உருவாக அடிப்படையாக காணப்படும் வடிவங்கள் இந்த அடிப்படை பயிற்சியில் காணப்படுகின்றன. எனவே இந்த பயிற்சி ஊடாக நீங்கள் மற்றைய அனைத்து எழுத்துக்களையும் இலகுவாக எழுதி பயிற்சி செய்து பழகிக்கொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

Christmas wishes in Sinhala, English and Tamil

Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil

Beginners Sinhala letters guide in Tamil

Contact Form

Name

Email *

Message *