சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கிடையிலான ஒற்றுமைகள்
சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கிடையிலான ஒற்றுமைகள்
நான்
ஏற்கனவே குறிப்பிட்டதைப்போன்று சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் பல்வேறுபட்ட மொழி ஒற்றுமைகளைக்
கொண்டுள்ளன. அந்த ஒற்றுமைகள் பற்றி ஒவ்வொரு வகைகளாகக் காண்போம். இதனூடாக நாம் சிங்கள
மொழியை நாம் எவ்வளவு இலகுவாக கற்கலாம் என்ற புரிந்துணர்வும், இலகுவான நுட்பங்களும்
உங்களுக்குப் புலப்படும்.
சிங்கள
மற்றும் தமிழ் மொழிகளுக்கிடையிலான ஒற்றுமைகளை பின்வரும் முறைகளாக நோக்கலாம்
-
எழுத்துக்களுக்கிடையிலான ஒற்றுமைகள்.
- சொற்களுக்கிடையிலான ஒற்றுமைகள்.
எழுத்துக்களுக்கிடையிலான
ஒற்றுமைகள்
எழுத்துக்களைப்
பற்றிய விரிவான விளக்கம் மற்றும் எழுத்து முறைமைகள் பற்றிய விடயத்தை இயல் மூன்றில்
நோக்குவோம். இதில் மேல்வாரியாக நாம் எவ்வாறு சிங்கள எழுத்துக்களுக்கிடையிலான ஒற்றுமைகளைப்
பற்றிப் புரிந்து கொள்வது என்பதனைப் பற்றி நோக்குவோம். சிங்கள எழுத்துக்களும் தமிழ்
எழுத்துக்களும் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக தமிழ் மொழி எழுத்துக்களைப் போன்றே
பல எழுத்துக்கள் குறிப்பிட்ட சில மாற்றங்களுடன் சிங்கள மொழியிலும் பயன்படுத்தப்படுகின்றன
.
|
I.
|
ප |
- |
ப |
|
II.
|
ය |
- |
ய |
|
III.
|
ව |
- |
வ |
|
IV.
|
ම |
- |
ம |
|
V.
|
ඉ |
- |
இ |
|
VI.
|
ඊ |
- |
ஈ |
மேலே
குறிப்பிட்ட எழுத்துக்களைக் கவனித்துப்பாருங்கள்.
“ப”
என்ற எழுத்தை முதலில் பாருங்கள். கிட்டத்தட்ட தமிழ் எழுத்தும் சிங்கள எழுத்தும் ஒரே
வடிவமைப்பை உடையதாகக் காணப்படுகின்றது. இவ்வாறாக “ய” என்ற எழுத்தையும் கவனித்துப்பாருங்கள்.
கிட்டத்தட்ட தமிழ் எழுத்தை ஒத்ததாகவே காணப்படும். முறையே “வ, ம, மற்றும் இ” எனும் எமுத்துக்களை
எடுத்து நோக்குங்கள்.
“ஈ”
எனும் எழுத்தை எடுத்து நோக்குங்கள். தமிழில் நாம் இரண்டு புள்ளிகள் இடுவதைப்போன்றே
சிங்கள மொழியிலும் காணப்படுகின்றது. இவ்வாறாக பெரும்பாலான எழுத்துக்கள் தமிழ் மொழியைத்
தழுவியதாகவே காணப்படுகின்றது.
அதனால்
சிங்கள மொழியைக் கற்கும் எமக்கு இது மிக இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக்க காணப்படும்.
சொற்களுக்கிடையிலான
ஒற்றுமைகள்
நான்
ஏற்கனவே சிங்கள மொழி என்றால் என்ன? என்ற பகுதியில் குறிப்பிட்டதைப்போன்று தமிழ்
மொழியில் உள்ள சொற்களே பெரும்பாலான மாற்றங்கள் இன்றி சிங்கள மொழியிலும் பயன்பாட்டில்
உள்ளன.
|
|
தமிழ்ச் சொற்கள் |
சிங்கள சொற்கள் |
சிங்கள உச்சரிப்புத் தமிழில் |
|
I.
|
அம்மா |
අම්මා |
அம்மா |
|
II.
|
அக்கா |
අක්කා |
அக்கா |
|
III.
|
மாமா |
මාමා |
மாமா |
|
IV.
|
தர்மம் |
ධම්ම |
தம்ம |
|
V.
|
குடை |
කුඩ |
குட |
|
VI.
|
பானம் |
පානය |
பானய |
|
VII.
|
சிங்கம் |
සිංහ |
சிங்க |
|
VIII.
|
கல் |
ගල් |
க(G)ல் |
இவ்வாறாக
தமிழ் மொழியில் உள்ள சொற்கள் பலவும் சிங்கள மொழியில் எவ்விதமான மாற்றமும் இன்றிப் பயன்பாட்டில்
உள்ளன. இவை ஒரு சில உதாரணங்களே. இதனைப்போன்ற பல உதாரணங்களை நாம் சொற்கள் தொடர்பான பகுதியில்
பார்க்கலாம்.
இவ்வாறாக
சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்குமான ஒற்றுமைகளை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். இவ் உதாரணங்கள் சிங்கள மொழியைக் கற்பது மிக மிக
இலகுவானது என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்ட தரப்பட்ட சில உதாரணங்களே ஆகும்.
Comments
Post a Comment