Sinhala letters writing methods / சிங்கள எழுத்துக்கள் எழுதும் முறை சிங்கள மொழி பற்றியும் அதன் அடிப்படைகள் பற்றியும் தொடர்ச்சியாக கற்று வருகின்றோம். அந்த வரிசையில் இப்பகுதியில் சிங்கள எழுத்துக்களை எவ்வாறாக எழுதுவது என்ற அடிப்படையை சில எழுத்துக்களின் துணை கொண்டு கற்போம். இந்த அடிப்படைகள் உங்களுக்கு எழுத்துக்களை எழுதி பயிற்சி செய்ய உதவி புரியும், மற்றும் எழுத்துக்களை எவ்வாறாக எழுதுவது என்ற அடிப்படையை வழங்கும். சிங்கள எழுத்துக்களை எழுதுவதற்காக சில அடிப்படை விதிமுறைகள் காணப்படுகின்றன. சிங்கள எழுத்துக்கள் அடிப்படையாக வட்ட வடிவான அமைப்பில் எழுதப்படக்கூடியவை. இந்தப் பகுதியில் நாம் ஏற்கனவே கற்ற எழுத்துகளை எழுதுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகளை எழுதிப் பயிற்சி செய்வது சிறந்த பலனைத் தரும்.