Sinhala Letter Tips In Tamil
Sinhala Letter Tips In Tamil
தமிழ் மொழியில் தமிழ் மொழியை ஓர் சரியான கட்டுக்குள் வைத்திருக்க இலக்கண, இலக்கிய விதிகள் காணப்படுகின்றன. அதனைப் போன்றே சிங்கள மொழியிலும் இலக்கண, இலக்கிய விதிகள் காணப்படுகின்றன.
இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைப் பயிலும் எமக்கு இவ்விதிகள் பெரிய சுமையாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக இலகுவான வழிகளை கற்று வைப்பது எமக்கு சிறந்த பயனை கற்றலில் தரக்கூடும்.
அந்த வகையில் இந்தப்பகுதியில் சிங்கள எழுத்துக்களைப் பற்றிய இலகு குறிப்பு முறை ஒன்றைக் காண்போம்.
சிங்கள மொழியில் சில எழுத்துக்களை எழுதுவதற்கென வித்தியாசமான பல விதிகள் உள்ளன.
தமிழில் "ம்" "ப்” “த்” என எழுத்துக்களை எழுதும்போது "்" எனும்குமியீட்ட மாத்திரம் பயன்படுத்தி “ப” எனும் எழுத்தை “ப்” எனவும், “த” எனும் எழுத்தை “த்” எனவும் மாற்றலாம். இந்த குறியீட்டை புள்ளி அல்லது குற்று என தமிழில் அழைப்பர். இந்த குறியீட்டை அனைத்து எழுத்துக்களுக்கும் பயன்படுத்த முடியும்.
சிங்கள மொழியைப் பொறுத்த வரை "்" புள்ளி என்ற இந்தக் குறியீட்டை க(Ha)ல் கிரீம என்று அழைப்பர். சிங்கள மொழியில் "்" எனும் குறியீட்டை குறிப்பிட 2 வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை எந்த எந்த எழுத்திற்கு பயன்படுத்த வேண்டும் என ஒரு தனிப்பட்ட விதி உள்ளது. அந்த விதியினை இங்கு இலகுவாக நோக்குவோம்.
![]() |
| Sinhala letter function mark-01 |
![]() |
| Sinhala letter function mark-02 |
முதலாவது குறியீட்டை கொடி அடையாளம் எனவும், இரண்டாவது குறியீட்டை முடி அடையாளம் எனவும் எமது புரிதலுக்காக அழைப்போம்.
முதலாவது குறியீட்டையோ அல்லது இரண்டாவது குறியீட்டையோ அனைத்து எழுந்துகளிற்கும் பயன்படுத்த முடியாது. எனவே எந்தக் குறியீட்டினை எங்கு, எந்த எழுத்திற்கு பயன்படுத்துவது என்பது என குறித்த சட்டதிட்டம் உள்ளது.
அச் சட்டதிட்டம் யாதெனில்,
- நீங்கள் ஓர் எழுத்தை எழுதும்போது அந்த எடுத்து உங்களது இடது கரப்பக்கமாக முடிவடைகின்றது எனில் அந்த எழுத்திற்கு முடி போல காணப்படும் முடி அடையாளம் பயன்படுத்தப்படும்.
- நீங்கள் ஓர் எழுத்தை எழுதும்போது அந்த எடுத்து உங்களது வலது கரப்பக்கமாக முடிவடைந்தால் அந்த எழுத்திற்கு கொடி போன்ற முடி அடையாளம் உபயோகிக்கலாம்.
![]() |
| Sinhala easy trick in Tamil |
இது எழுத்துக்களை இலகுவாக ஞாபகப்படுத்தி வைக்க ஓர் இலகு வழிமுறையாகும்.
![]() |
| Sinhala letters examples |




Comments
Post a Comment