Sinhala conversation in Bakery
Sinhala conversation in Bakery
உரையாடல்கள் எனப்படுபவை எல்லா மொழிகளிலும் ஓர் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உதாரணமாக மொழிகள் உருவாக்கப்பட்டதற்கான அடிப்படை காரணமே தொடர்பு கொள்வதற்காகத்தான் என நாம் எடுத்துக்கொள்ளலாம்.
இந்தப்பகுதியில் நாம் சிங்கள மொழியில் எவ்வாறாக ஓர் வெதுப்பகத்தில் உரையாடல் மேற்கொள்ளலாம் என்பதைப்பற்றி கற்போம். இதில் மிக முக்கியமான அடிப்படைச் சொற்கள் மற்றும் அடிப்படை உரையாடல்களைப்பற்றி பார்ப்போம்.
சிங்கள மொழியில் அதாவது உரையாடல் மொழியில் வெதுப்பகத்தை பேக்கறி என்றே பொதுவாக அழைக்கின்றனர்.
வெதுப்பகத்தில் நிச்சயமாக சூடு அல்லது வெப்பம் ஓர் அத்தியாவசியமான விடயமாகும். சிங்கள மொழியில் சூடு அல்லது வெப்பத்தை உணுசும் என அழைப்பர்.
அடுத்த அத்தியாவசியமான விடயம் அடுப்பு. அதிலும் விறகடுப்பு எனப்படுவது பாரம்பரியமான ஓர் விடயமாகும். விறகு அடுப்பிற்கு தர உதுன என அழைப்பர். அதில் தர எனப்படுவது விறகு என பொருள்படும். அடுப்பு என்பதற்கு உந்துன் அல்லது லிப என்றொரு பொருளும் காணப்படுகின்றது.
அடுத்தபடியாக பாண் எனும் உணவுப்பண்டத்தை பாண் எனவே சிங்கள மொழியில் அழைக்கின்றனர். பணிஸ் எனப்படுவதையும் அவ்வாறே அழைக்கின்றனர்.
உதாரணமாக பணிஸ் எனும்போது அதில் பல வகைகள் உண்டு. அதனை எவ்வாறு அழைப்பது என்பதைப்பற்றி நோக்குவோம்.
- சீனி பணிஸ்- சீனி பணிஸ் என்றே சிங்கள மொழியிலும் அழைப்பர்.
- ஜேம் பணிஸ்- ஜேம் பணிஸ் என்றே சிங்கள மொழியிலும் அழைப்பர்.
- கறி பணிஸ்- கறி பணிஸ் என்றே சிங்கள மொழியிலும் அழைப்பர்.
- மீன்கறி பணிஸ்- மாழு பணிஸ் என்று சிங்கள மொழியில் அழைப்பர்.
- மரக்கறி பணிஸ்- எளவலு பணிஸ் என்று சிங்கள மொழியில் அழைப்பர்.
- ரின் மீன் கறி பணிஸ்- ரின் மாழு பணிஸ் என்று சிங்கள மொழியில் அழைப்பர்.
- கிறீம் பணிஸ்- கிறீம் பணிஸ் என்றே சிங்கள மொழியிலும் அழைப்பர்.
அடுத்தகட்டமாக கடையில் வேலை செய்யும் நபர்களை எவ்வாறு அழைப்பது என்பதைப்பற்றி அவதானிப்போம்.
முதலாளி என்பதை லொக்கா என அழைப்பர். லொக்கா என்பது பாரம்பரிய ஒரு மொழி வளமாகும். முதலாளிகள், கனவந்தர்கள், தனவந்தர்கள் என மிகக்கூடிய பணபலம் பெற்ற நபர்களை அழைக்கப் பயன்படும் சொல் ஆகும். பொதுவாக சிங்கள மொழியில் முதலாளியை முதலாளி எனவே அழைப்பது பொதுவான ஓர் வழக்கமாகும்.
வேலைக்காரன் அல்லது சேவையாளர் எனப்படுவதை சேவகயா அல்லது கார்ய மண்டலய என அழைப்பர். பொதுவாக சேவையாளரை கோலயா எனவும் அழைக்கும் வழக்கமும் உள்ளது.
சில இடங்களில் நாம் பார்த்திருப்போம் கை கழுவும் இடம், பணியாளர்கள் மட்டும் என்ற அறிவுறுத்தல்களை. அவ்வாறான அறிவுறுத்தல்களை எவ்வாறு சிங்கள மொழியில் கூறுவது என்று பார்ப்போம்.
கார்ய மண்டலய என்றால் சேவையாளர் என்று பார்த்தோம். எனவே சேவையாளர் அறையை கார்ய மண்டலய காமரய என்று அழைக்கலாம்.
அடுத்ததாக சேவையாளர்கள் மட்டும் என சில இடங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை அவதானித்திருப்போம். அதற்கு சிங்கள மொழியில் கார்ய மண்டலயட கார்ய மண்டலயஎன குறிப்பிடலாம். கார்ய மண்டலய என்பது மட்டும் என்று பொருள்படும்.
அடுத்ததாக கை கழுவுதல் என்பதை அத் சேதீம என அழைக்கலாம்.
சுத்தமாக பேணவும் என்பதனை பிரிசிது தபாகன்ன என குறிப்பிடலாம்.
குப்பை கூடையை குணு கூடய என குறிப்பிடலாம்.
அடுத்தபடியாக நாம் சில சம்பாஷணைகளை எவ்வாறு எளிமையாக அமைப்பது என்பதனை பற்றி பார்ப்போம்.
எனக்கு ஒரு பாண் தாருங்கள் என்பதனை கருணாகர மட பான் கேல்லக் தென்ன என குறிப்பிடலாம்.
இதில் கருணாகர என்பது தயவு செய்து என பொருள்படும். ஆயினும் பல இடங்களில் இது மரியாதையாக அழைப்பது அல்லது மரியாதையாக வினவுவதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட வசனத்தில் மட பான் தென்ன என குறிப்பிடுவதே போதுமானது. உங்களது மேலதிக அறிவு தேவைக்காகவே பூரண வசனமாக தந்துள்ளேன்.
எவ்வளவு பணம் என்பதனை ருபியல் கீயத கியலா என அழைக்கலாம். இதை சரியாக குறிப்பிட வேண்டுமாயின் எவ்வளவு பணம் என்பதை கூறுங்கள் என வினவுவதை போன்றது ஆகும். ரூபியல் கீயத என வினவுவதே போதுமானது.
இன்னுமோர் ஜாம் பணிஸ் தாருங்கள் என்பதை தவ ஜேம் பணிஸ் எக்க தென்ன என குறிப்பிடலாம். தவ என்றால் இன்னுமோர் என பொருள்படும்.
மொத்தமாக எவ்வளவு என்பதை வினவுவதற்கு சம்பூரண கொபமண என குறிப்பிடலாம். ஒட்டு மொத்தம் என்பதை ஒக்கம எனவும் குறிப்பிடலாம். ஆனால் இது சில இடங்களில் பொருத்தமானதாக இருக்காது.
மிகுதியை கணக்கிடுங்கள் என்பதை ஷேஷய பலன்ன என அழைக்கலாம்.
உங்களிடம் மீன் பணிஸ் உள்ளதா? என்பதை ஒயா ளங்க மாலு பணிஸ் தியெனவாத? என குறிப்பிடலாம்.
இவை சில உதாரணங்களாகும். இவை மாத்திரம் நாம் சிங்கள மொழி கற்பதற்கு போதது. எனவே இந்த வசனங்களை அடிப்படையாக கொண்டு நீங்கள் சுயமாக பயிற்சி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் பயிற்சியே சிறந்த பலனை தரும். இந்த வசனங்களை அடிப்படையாக கொண்டு வேறு வசனங்களை எழுதி பழகிக்கொள்ளுங்கள்.


Comments
Post a Comment