Followers

சிங்களப் பெயரெச்சங்கள் (Sinhala Adjectives)

சிங்களப் பெயரெச்சங்கள் (Sinhala Adjectives)

பெயரெச்சங்கள் எனப்படுபவை தமிழ் மொழியில் மாத்திரமன்றி அனைத்து மொழிகளிலும் காணப்படும் ஓர் முக்கியமான பகுதியாகும். காரணம் பெயரெச்சங்கள் ஓர் பொருளின் அல்லது ஒரு விடயத்தின் விபரிப்பினை எடுத்துக் கூறும் ஓர் சொற்கூட்ட அமைப்பு என நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

மற்றைய மொழிகளினைப் போன்றே சிங்கள மொழியிலும் பெயரெச்சங்களின் அமைப்பும் பங்கும் மிக முக்கியமானது. ஏனெனில் சிங்கள மொழியிலும் அன்றாட பயன்பாட்டில் இவை முக்கிய இடம் பெறுகின்றன. சிங்கள பெயரெச்சங்களை நன்கு கற்றுக்கொள்ளும் போது, அன்றாட வாழ்வில் சிங்கள மொழியை நன்கு கையாளும் திறனும், சிங்கள மொழின் இலகுத்தன்மையும், சரியாக எவ்வாறு மொழியைப் பிரயோகிக்க வேண்டும் என்ற புரிதலும் எமக்கு ஏற்படும். 

முதலில், சிங்கள இலக்கணத்தில் பெயரெச்சங்கள் எவ்வாறாக செயலாற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

சிங்களப் பெயரெச்சங்கள் என்பது ஒரு நபரை அல்லது பொருளை விவரிக்கும் சொற்களாகும். கீழே சில உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைக் கவனிப்போம்.


EnglishSinhalaதமிழ் ஒலிப்பாடுதமிழ் அர்த்தம்
AdjectivesNāma viśēṣaṇa – නාම විශේෂණநாம விசேஷணபெயரெச்சங்கள்
A green treekola pāṭa gasak – කොළ පාට ගසක්கொல பாட்ட கசக்பச்சை மரம்
A tall buildingusa goḍanægillak – උස ගොඩනැගිල්ලක්உச கொடநகில்லக்உயரமான கட்டிடம்
A very old manitā mahalu minisek – ඉතා මහළු මිනිසෙක්இதா மகலு மினிசெக்மிகவும் வயதான மனிதன்
The old red housepærani ratu nivasa – පැරණි රතු නිවසபரணி ரது நிவசபழைய சிவப்பு வீடு
A very nice frienditā hoṇda miturek – ඉතා හොඳ මිතුරෙක්இதா ஹொந்த மிதுரெக்ஒரு நல்ல நண்பன்



சிங்களப் பெயரெச்சங்கள் 

சிங்கள மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கும் எமக்கு, சிங்களப் பெயரெச்சங்கள் (Adjectives) மிக முக்கியமான ஒரு பகுதி. பெயரெச்சங்களை சரியாகப் பயன்படுத்த தெரிந்தால், சிங்கள வாக்கியங்களை இயல்பாகவும், கருத்துச் செறிவுடனும், அழகாகவும் உச்சரிக்கலாம்.

சிங்கள மொழியில், nāma viśēṣaṇa (නාම විශේෂණ) என்று அழைக்கப்படும் பெயரெச்சங்கள் நபர், விலங்கு அல்லது பொருளின் தன்மையை விவரிக்கப் பயன்படும்.


சிங்களத்தில் பெயரெச்சங்கள் எங்கு வரும்?

அதிகமாக, பெயரெச்சங்கள் பெயருக்கு முன் வருகின்றன.
உதாரணம்:

  • kola pāṭa gasak – කොළ පාට ගසක් → கொல பாட்ட கசக்---“ஒரு பச்சை மரம்”

  • usa goḍanægillak – උස ගොඩනැගිල්ලක් →உச கொடநகில்லக்--- “ஒரு உயரமான கட்டிடம்”

சிங்களப் பெயரெச்சங்களை அடிக்கடி பயிற்சி செய்து வெவ்வேறு பொருட்களை பார்த்து, அவற்றை சிங்களத்தில் பெயரெச்சங்களுடன் விவரிக்க முயற்சி செய்வதனூடாக உங்கள் சிங்கள மொழியினை மேலும் மேலும் விருத்தி செய்து கொள்ளலாம்.

உங்களுக்கான சில பெயரெச்சங்களின் அட்டவணைகள் தரப்பட்டுள்ளன. இவற்றைக் கற்றுப் பயன்படுத்தி உங்களது சிங்கள மொழியின் அறிவினை விருத்திசெய்து கொள்ளுங்கள்.


நிறங்கள்

English Sinhala தமிழ் ஒலிப்பாடு தமிழ் அர்த்தம்
colors

pāṭa – පාට

பாட

நிறங்கள்

black kaḷu – කළු களு கருப்பு

blue nil – නිල් நில் நீலம்

brown dūmburū – දුඹුරු தும்புரு பழுப்பு

gray aḷu – අළු அளு சாம்பல் நிறம்

green kola – කොළ கொல பச்சை

orange tæmbili – තැඹිලි தம்பிலி ஆரஞ்சு / செம்மஞ்சள்

purple dam – දම් தம் ஊதா

red ratu – රතු ரது சிவப்பு

white sūdu – සුදු சுது வெள்ளை

yellow kaha – කහ கஹ மஞ்சள்





வடிவங்கள்


English Sinhala தமிழ் ஒலிப்பாடு தமிழ் அர்த்தம்
shapes

häḍayan – හැඩයන්

ஹெடயன்

வடிவங்கள்

circular vattaya – වෘත්තය வத்தய வட்ட வடிவம்

straight ṛju – ඍජු ர்ஜு நேரான

square samacaturasraya – සමචතුරස්‍රය சம சதுரஸ்ரய சதுரம்

triangular trikōṇaya – ත්‍රිකෝණය த்ரிகோணய முக்கோணம்





சுவைகள்

English Sinhalaதமிழ் ஒலிப்பாடு தமிழ் அர்த்தம்
tastes

rasayan – රසයන්

ரசயன்

ருசிகள் / சுவைகள்

bitter titta – තිත්ත தித்த
கசப்பான

fresh nævum – නැවුම් நெவும்
புதிதான

salty lūṇu misra – ලුණු මිශ්‍ර லுனு மிஸ்ர
உப்பான

sour æmbul – ඇඹුල් அம்புல்
புளிப்பான

spicy rasavat – රසවත් ரசவத்
காரமான 

sweet pæṇirasa – පැණිරස பெணிரச இனிப்பான





குணங்கள்

English Sinhala தமிழ் ஒலிப்பாடு தமிழ் அர்த்தம்
qualities

gūṇa – ගුණ

குண

குணங்கள் / பண்புகள்

bad naraka – නරක நரக மோசமான / கெட்ட

clean pirisidu – පිරිසිදු பிரிசிது சுத்தமான

dark anduru – අඳුරු அந்துரு இருண்ட

difficult amāru – අමාරු அமாரு கடினமான

dirty kiliti – කිලිටි கிலிட்டி அழுக்கான

dry viyali – වියළි வியலி உலர்ந்த

easy pahasu – පහසු பஹசு எளிதான

empty his – හිස් ஹிஸ் காலியான

expensive mila adhika – මිල අධික மில அதிக விலையுயர்ந்த

fast vēgavat – වේගවත් வேகவத் வேகமான

foreign vidēśiya – විදේශීය விதேஷிய வெளிநாட்டு

full pirunu – පිරුණු பிருனு நிரம்பிய

good hoṇda – හොඳ ஹொந்த நல்ல

hard dæḍi – දැඩි தடி கடினமான / வலுவான

heavy bara – බර பர கனமான

inexpensive lāba – ලාබ லாப மலிவான

light (weight) sæhællu – සැහැල්ලු செஹெல்லு இலகுவான

local dēśiya – දේශීය தேசிய உள்ளூர்

new alut – අලුත් அலுத் புதிய

noisy ghōṣā sahita – ඝෝෂා සහිත ஷோஷா ஸஹித சத்தமான

old pæraṇi – පැරණි பரணி பழைய

powerful balavat – බලවත් பலவத் சக்திவாய்ந்த

quiet nihanda – නිහඬ நிஹண்ட அமைதியான

correct niværadi – නිවැරදි நிவெரதி சரியான

slow man̆d vēga – මඳ වේග மன்த வேக மெதுவான

soft madu – මෘදු மது மென்மையான

very itā – ඉතා இதா மிகவும்

weak durvala – දුර්වල துர்வல பலவீனமான

wet teta – තෙත தெத ஈரமான

wrong væradi – වැරදි வெரதி தவறான

young taruṇa – තරුණ தருண இளையவர் / இளம்



அளவுகள்


English Sinhala தமிழ் ஒலிப்பாடு தமிழ் அர்த்தம்
quantities

pramāṇayan – ප්‍රමාණයන්

ப்றமானயன்

அளவுகள் / தொகைகள்

few svalpa – ස්වල්ප ஸ்வல்ப சில / குறைவான

little sulu – සුළු சுலு கொஞ்சம் / சிறிது

many boho – බොහෝ பொஹோ பல / அதிகமான

much boho – බොහෝ பொஹோ நிறைய / மிக அதிகம்

part koṭasa – කොටස கொடச பகுதி / ஒரு பங்கு

some samahara – සමහර ஸமஹர சில / கொஞ்சம்

a few sulu – සුළු சுலு சில / மிகக் குறைவு

whole sampūrṇa – සම්පූර්ණ ஸம்பூர்ண முழுமையான / முழு




அளவுப் பிரமாணங்கள்

English Sinhala தமிழ் ஒலிப்பாடு தமிழ் அர்த்தம்
sizes

pramāṇayan – ප්‍රමාණයන්

ப்றமானயன்

அளவுகள் / பருமன் வகைகள்

big loku – ලොකු லொகு பெரிய

deep gæmburū – ගැඹුරු கம்புரு ஆழமான

long diga – දිග திக நீளமான

narrow paṭu – පටු படு குறுகிய / நெருக்கமான

short koṭa – කොට கொட குறுகிய / குட்டையான

small kūḍā – කුඩා குடா சிறியது

tall usa – උස உச உயரமான

thick mahata – මහත மஹத தடித்த

thin sihin – සිහින් சிஹின் மெலிந்த / மெல்லிய

wide pūlul – පුළුල් புலுல் விசாலமான / அகலமான

Comments

Popular posts from this blog

Christmas wishes in Sinhala, English and Tamil

Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil

Beginners Sinhala letters guide in Tamil

Contact Form

Name

Email *

Message *