சிங்கள வரிசை எண்கள் (Ordinal Numbers)
சிங்கள வரிசை எண்கள் (Ordinal Numbers)
சிங்கள மொழியை வாசிப்பதிலும் பேசுவதிலும், வரிசை எண்கள் (Ordinal Numbers) மிக முக்கியமானவை. பொதுவாக, first, second, third போன்ற சொற்கள் ஓர் தானத்தின் “இடத்தை” அல்லது “வரிசையை” குறிக்கின்றன. உதாரணமாக முதலாம் இடம், நான்காவது வரிசை, எட்டாவது நபர், ஆறாவது புகையிரத நிலையம் என இவற்றை எமது தினசரி நாட்களில் பயன்படுத்துகின்றோம். இவை எண்ணிக்கையை (Number countings) அல்ல, மாறாக முடிவிடத்தை அல்லது தரத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
சிங்கள மொழியிலும் இதேபோல் தனித்துவமான வரிசை எண்கள் உள்ளன. இவற்றை கற்றுக்கொள்வது தினசரி உரையாடல்களில், கல்வி, தேதி, விளையாட்டு, பட்டியல் வரிசை போன்ற சூழல்களில் எமது தேவையை நிறைவேற்ற மிகவும் உதவும்.
சிங்கள வரிசை எண்கள் – அறிமுகம்
சிங்களத்தில் Ordinal Numbers என்பதற்கு: veni lesa yedena aṁka – වෙනි ලෙස යෙදෙන අංක- வெனி லெச யேதென அங்க எனஅதாவது தமிழில்: “வரிசையை வெளிப்படுத்தும் எண்கள்” என குறிப்பிடப்படுகின்றன.
இவை எதற்குப் பயன்படுத்தப்படுகின்றன?
-
ஒருவரின் தரவரிசை
-
பொருட்கள் வரிசை
-
முடிவுகளின் இடம்
-
போட்டியின் நிலை
-
நேரம் அல்லது நிகழ்வுகளின் வரிசை
சிங்கள வரிசை எண்கள் – தமிழ் அர்த்தம் + தமிழ் உச்சரிப்புடன்
| English | Sinhala (Romanized) | Sinhala Script | Tamil Pronunciation | Tamil Meaning |
|---|---|---|---|---|
| Ordinal Numbers | veni lesa yedena aṁka | වෙනි ලෙස යෙදෙන අංක | வெனி லெஸ யெதெந அங்க | வரிசை எண்கள் |
First |
palaveni | පළවෙනි | பலவெனி | முதல் |
Second |
deveni | දෙවෙනි | தெவெனி | இரண்டாவது |
Third |
tūnveni | තුන්වෙනි | துன்வெனி | மூன்றாவது |
Fourth |
sataraveni | සතරවෙනි | சதரவெனி | நான்காவது |
Fifth |
pasveni | පස්වෙනි | பஸ்வெனி | ஐந்தாவது |
Sixth |
hayaveni | හයවෙනි | ஹயவெனி | ஆறாவது |
Seventh |
hatveni | හත්වෙනි | ஹத்வெனி | ஏழாவது |
Eighth |
aṭaveni | අටවෙනි | அட்டவெனி | எட்டாவது |
Ninth |
navaveni | නවවෙනි | நவவெனி | ஒன்பதாவது |
Tenth |
dasaveni | දසවෙනි | தஸவெனி | பத்தாவது |
Eleventh |
ekalosveni | එකළොස්වෙනි | எகலொஸ்வெனி | பதினொன்றாவது |
Twelfth |
dolosveni | දොළොස්වෙනි | டொலொஸ்வெனி | பன்னிரண்டாவது |
Thirteenth |
dahatūnveni | දහතුන්වෙනි | தஹதூன்வெனி | பதின்மூன்றாவது |
Fourteenth |
dahahataraveni | දහහතරවෙනි | தஹஹதரவெனி | பதினான்காவது |
Fifteenth |
pahalosveni | පහළොස්වෙනි | பஹலொஸ்வெனி | பதினைந்தாவது |
Sixteenth |
dahasayaveni | දහසයවෙනි | தஹஸயவெனி | பதினாறாவது |
Seventeenth |
dahahatveni | දහහත්වෙනි | தஹஹத்வெனி | பதினேழாவது |
Eighteenth |
dahaaṭaveni | දහඅටවෙනි | தஹஅட்டவெனி | பதினெட்டாவது |
Nineteenth |
dahanavaveni | දහනවවෙනි | தஹநவவெனி | பத்தொன்பதாவது |
Twentieth |
visiveni | විසිවෙනි | விஸிவெனி | இருபதாவது |
Once |
varak | වරක් | வரக் | ஒருமுறை |
Twice |
devarak | දෙවරක් | டெவரக் | இருமுறை |
சிங்கள வரிசை எண்களின் அமைப்பை எளிதாக புரிந்துகொள்ள சிறிய குறிப்புகள்
1. “වෙනි-veni-வெனி” என்ற இறுதிச்சொல் முக்கியம்
- eka → palaveni (எக → பலவெனி) → முதலாவது
- deka → deveni (டெக → தெவெனி) → இரண்டாவது
- tuna → tūnveni (துன → துன்வெனி) → மூன்றாவது
இது வரிசை எண்களை அடையாளம் காண உதவும். எனவே வெனி என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் அது ஓர் நிலையத்தின் தானத்தை குறிப்பதாக அமையும் என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.
2. 11–19 வரையிலான எண்கள் 10 (daha) அடிப்படையில் உருவாகும்
உதாரணம்:
13
Cardinal Number (அடிப்படை எண்)- 13
13 → daha (10) + tuna (3) → dahatūna
Ordinal Number (வரிசை எண்)
daha + tuna + veni → dahatūnveni
- daha = பத்து
- tuna = மூன்று
- veni = வரிசையை குறிக்கும் இறுதிப்பகுதி
முழு வடிவம்:
- dahatūnveni – දහතුන්වෙනි
- Tamil Pronunciation (தமிழ் உச்சரிப்பு): தஹதூன்வெனி
- Tamil Meaning: பதின்மூன்றாவது
- daha = பத்து
- aṭa = எட்டு
- veni = வரிசை குறிக்கும்_SUFFIX_
- dahaaṭaveni – දහඅටවෙනි
- Tamil Pronunciation (தமிழ் உச்சரிப்பு): தஹஅட்டவெனி
- Tamil Meaning: பதினெட்டாவது
3. நாள், தேதி, அல்லது தரவரிசை குறிப்பிடும்போது அதிகம் பயன்படுத்தப்படும்
உதாரணங்கள்:
-
முதல் நாள் → palaveni davasa- பளவெனி தவச
-
ஏழாவது இடம் → hatveni thanata- கத்வெனி தனட
-
பத்தாவது வகுப்பு → dasaveni kelasaya- தசவெனி கெலசய
ஏன் சிங்கள வரிசை எண்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
-
தினசரி வாழ்வில் சிங்கள வரிசை எண்களின் பயன்பாடு மிக மிக அதிகமாகும்
-
நேரம், தேதி, இடம் போன்ற அடிப்படைத் தகவல்களைச் சரியாகச் சொல்ல உதவும்
-
சிங்கள மொழிக்கற்கையில் இது ஒரு முக்கிய நிலையைப் பெறுகின்றது.
சிங்கள Ordinal Numbers கற்றுக்கொள்வது ஆரம்பத்தில் சற்றுப் புதிதாகவும் சற்று கடினமானதாகவும் தோன்றலாம். ஆனால் அடிப்படை அமைப்பை ஒருமுறை புரிந்துகொண்டால், 1–20 வரையிலான வரிசை எண்கள் எளிதில் நினைவில் நிற்கும். 1-20 வரையான வரிசை எண்களே அதிகமாக பயன்படுத்தப்படுவன. எனவே இவற்றைக் கற்பது மிக அவசியமானது.
மேலே குறிப்பிட்ட சிங்கள வரிசை எண்களின் அட்டவணையைப் பயிற்சி செய்வதனூடாக நீங்கள் சிங்களத்தில் வரிசை, நிலை, இடம் போன்றவற்றைக் கூறுவதில் நீங்களும் தேற்ச்சி பெற்று விடுவீர்கள்.
Comments
Post a Comment