Followers

Numbers in Sinhala

Numbers in Sinhala

இரண்டாம் மொழியாக சிங்கள மொழி கற்பவர்களுக்கான எண்கள் சிங்களத்தில்

சிங்கள மொழியை கற்பதற்கான பயணத்தில், எண்கள் (Numbers) மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. அன்றாட உரையாடல்கள், கணக்குகள், தேதி, நேரம் கூறுதல், விலைகளைப் பற்றிப் பேசுதல், பொருட்களை எண்ணுதல் போன்ற அனைத்திலும் எண்கள் தவிர்க்க முடியாதவை. அதனால், சிங்கள எண்களின் அமைப்பு மற்றும் உச்சரிப்பு முறையை புரிந்துகொள்வது மொழிக்கற்றலில் ஒரு வலுவான அடித்தளமாகும்.

இந்த கட்டுரையில், சிங்கள அடிப்படை எண்கள் (Cardinal Numbers) எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அவை எவ்வாறு உருவாகின்றன என்பதை எளிமையாகவும் விளக்கமான முறையிலும் பார்ப்போம்.


Japan Rose
Flowers


சிங்கள எண்களின் முக்கியத்துவம்

எண்கள் என்பவை எந்த மொழியிலும் “எத்தனை?” எனும் கேள்விக்கு பதிலளிக்கும் அடிப்படை சொற்கள் ஆகும். 

உதாரணமாக 

  1. எத்தனை மலர்கள் மலர்ந்துள்ளன?
  2. எத்தனை பறவைகள் வானில் பறக்கின்றன?
  3. எத்தனை தொலைபேசிகள் உங்களிடம் உள்ளது?
  4. எத்தனை மணிக்கு நான் வர வேண்டும்?
  5. எவ்வளவு தூரத்தில் பாடசாலை உள்ளது?
  6. எவ்வளவு ஆழத்தில் கிணறு தோண்டப்பட்டுள்ளது?
  7. வீடு கட்டப்பட எத்தனை கற்கள் வேண்டும்? 
என மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும்போது விடை எண்களை அடிப்படையாகக் கொண்டே அமையும்.

சிங்கள மொழியிலும் அவை அதே வகையில் செயல்படுகின்றன.
"Counting Numbers" என்று அழைக்கப்படும் இந்த எண்கள் அளவு மற்றும் எண்ணிக்கை குறிக்க பயன்படுகின்றன.

சிங்கள மொழியில், ஒவ்வொரு எண்ணும் தனித்துவமான உச்சரிப்பும், எழுத்துருவமைப்பையுங் கொண்டுள்ளது. குறிப்பாக 1 முதல் 20 வரை உள்ள எண்களில் சில சேர்க்கை வடிவங்கள் சற்று வித்தியாசமாகவும், அடிப்படை உச்சரிப்புக்கள் இலகுவாகவும் இருப்பதால் கற்றுக்கொள்ளும்போது அவை எமக்கு இலகுவாக இருக்கும்.



எண் அட்டவணை

கீழே ஆங்கில எண்கள் மற்றும் அதற்குச் சமமான சிங்கள எண்கள் மற்றும் தமிழ் உச்சரிப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன:

English Sinhala (Romanized) Sinhala Script  தமிழ் உச்சரிப்பு Tamil Meaning
Numbers aṁka අංක அங்க எண்கள்
One eka එක எக ஒன்று

Two
deka දෙක தெக இரண்டு

Three
tūna තුන துன மூன்று

Four
hatara හතර ஹதர நான்கு

Five
paha පහ பஹ ஐந்து

Six
haya හය ஹய ஆறு

Seven
hata හත ஹத ஏழு

Eight
aṭa අට அட எட்டு

Nine
navaya නවය நவய ஒன்பது

Ten
dahaya දහය தஹய பத்து

Eleven
ekolaha එකොළහ எகொலஹ பதினொன்று

Twelve
dolaha දොළහ தொலஹ பன்னிரண்டு

Thirteen
dahatūna දහතුන தஹதுன பதின்மூன்று

Fourteen
dahahatara දහහතර தஹஹதர பதினான்கு

Fifteen
pahalova පහළොව பஹலொவ பதினைந்து

Sixteen
dahasaya දහසය தஹஸய பதினாறு

Seventeen
dahahata දහහත தஹஹத பதினேழு

Eighteen
daha aṭa දහඅට தஹஅட பதினெட்டு

Nineteen
dahanavaya දහනවය தஹநவய பத்தொன்பது

Twenty
vissa විස්ස விஸ்ஸ இருபது

Hundred
siyaya සියය சியய நூறு

One thousand
dahasa දහස தஹஸ ஆயிரம்

Million
miliyanaya මිලියනය மிலியனய ஒரு மில்லியன்




சிங்கள எண்களின் அமைப்பு – எப்படி புரிதல் பெறுவது?

சிங்கள மொழியில் 11–19 வரையிலான எண்கள் உருவாகும் விதம் ஆங்கிலத்தின் “eleven, twelve…” போல அல்லாது தமிழ் மொழியைப் போன்று அமைந்துள்ளது. உதாரணமாக தமிழில் பத்து+ஒன்று=பதினொன்று, பத்து+இரண்டு=பன்னிரெண்டு என அமைகின்றது. அதே போன்றே சிங்கள மொழியிலும் “10 + எண்” என்ற வடிவத்தில் அமைந்துள்ளது.


உதாரணமாக: 13 → daha (10) + tuna (3) → dahatūna மற்றும் 18 → daha (10) + aṭa (8) → dahaaṭa என்ற எண்களை நோக்குவோம்.


13 – சிங்களத்தில் எப்படிச் சேர்க்கப்படுகிறது?

13 → daha (10) + tūna (3) → dahatūna

  • daha = 10

  • tūna = 3

  • சேர்ந்து → dahatūna (දහතුන)

👉 தமிழ் உச்சரிப்பு: தஹ-தூன
👉 தமிழ் அர்த்தம்: பதின்மூன்று



18 – சிங்களத்தில் எப்படிச் சேர்க்கப்படுகிறது?

18 → daha (10) + aṭa (8) → dahaaṭa

  • daha = 10

  • aṭa = 8

  • சேர்ந்து → dahaaṭa (දහඅට)

👉 தமிழ் உச்சரிப்பு: தஹ-அட
👉 தமிழ் அர்த்தம்: பதினெட்டு

இது சிங்கள மொழியின் இயல்பான சொற்றொடர் அமைப்பாகும்.



சிங்கள எண்களை எளிதாக மனப்பாடம் செய்ய உதவும் குறிப்புகள்

1. ஒலியுடன் கற்றுக்கொள்ளவும்

சிங்கள மொழி இசை அசைவுப்போக்கு (rhythmic) கொண்டதால், ஒலி அடிப்படையில் கற்றால் நினைவில் நீண்ட நேரம் நிற்கும்.


2. 1–10 வரை முழுமையாக கற்று மனனம் செய்து கொள்ளுங்கள்

1 தொடக்கம் 10 வரையான எண்களே அனைத்து எண்களுக்குமான அடிப்படை. இதை கற்றுக்கொண்டால் 11–100, 101-1000001 என தேவைப்படும் எண்களை எளிதாக உருவாக்கலாம்.


3. ஒத்த ஒலிaமைப்புடன் உச்சரிக்கப்படும் எண்களைக் கவனித்துப் படியுங்கள்.

உதாரணமாக ஏழு hata (7) மற்றும் நான்கு 
hatara (4) என்ற இரு எண்களையும் எடுத்துக்கொள்வோம்.
இவை ஒலி ஒற்றுமையைக் கொண்டவை ஆனால் வேறுபட்ட எண்கள் ஆகும். எனவே இந்த உச்சரிப்பு வேறுபாட்டை நினைவில் வைத்துக்கொள்ளவதன் ஊடாக இரு எண்களையும் ஒரே சமயத்தில் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

4. தினசரி உரையாடலில் பயன்படுத்திப் பழகுங்கள்

உதாரணமாக:

1. “two books” → deka poth
  • Sinhala: deka poth (දෙක පොත්)

  • Sinhala pronunciation in Tamil: தெக பொத்

  • Tamil meaning: இரண்டு புத்தகங்கள்


2. “seven days” → hata davasa
  • Sinhala: hata davasa (හතදවස)

  • Sinhala pronunciation in Tamil: ஹத தவச

  • Tamil meaning: ஏழு நாட்கள்


சிங்கள எண்கள் அன்றாட வாழ்க்கையில் எப்படி உதவும்?

சிங்களம் பேசும் நண்பர்களுடன் உரையாடுவதில் தொடங்கி, கடைகள், சுற்றுலா இடங்கள், விலைக்குறிப்பு, பேருந்து, ரயில், உணவகங்கள் போன்ற பல்வேறுபட்ட சூழல்களில் எண்களின் பயன்பாடு மிக அதிகமாகும். எனவே அடிப்படை எண்களை சரியாக கற்றுக்கொள்வது உங்கள் தொடர்பாடலை மிகவும் எளிதாக்கும்.


சிங்கள எண்கள் மிகவும் எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் கற்கக்கூடியவை. சரியான முறையில் தொடங்கினால், குறுகிய காலத்திலேயே நீங்கள் சிங்கள எண்களை நன்றாக படிக்கவும் பேசவும் முடியும். ஒலி, எழுத்து, சேர்க்கை ஆகியவற்றை பயிற்சி செய்து வரும்போது, சிங்கள மொழியில் உங்கள் திறன் விரைவில் மேம்படும்.

Comments

Popular posts from this blog

Christmas wishes in Sinhala, English and Tamil

Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil

Beginners Sinhala letters guide in Tamil

Contact Form

Name

Email *

Message *