Basic Sinhala Sentences Making
Basic Sinhala Sentences Making
சிங்கள மொழியை பொறுத்த அளவில் வசனங்களை உருவாக்குவது மிக இலகுவானது. குறிப்பாக இரண்டு வாக்கியங்களை மாத்திரம் பயன்படுத்தி அர்த்தமுள்ள வசனங்களை உருவாக்கிவிட முடியும்.
இவ்வாறாக எளிமையான வசனங்களை உருவாக்கி கதைப்பதற்கும், எழுதுவதற்கும் நீங்கள் சிங்களச் சொற்களை அதுவும் அடிப்படைச் சொற்களை தெரிந்து வைத்திருப்பதே போதுமானது.
பின்வரும் உதாரணங்களைக் கவனித்துப் பாருங்கள்.
- මම යනවා - மம யனவா- நான் போகின்றேன்
- අපි යනවා - அபி யனவா-நாங்கள் போகின்றோம்
- ඔයා යනවා- ஓயா யனவா- நீ போகின்றாய்
- ඔයාලා යනවා - ஓயாலா யனவா- நீங்கள் போகின்றீர்கள்
- රවි යනවා - ரவி யனவா- ரவி போகின்றான்
- මාලා යනවා - மாலா யனவா- மாலா போகின்றாள்
- එයා යනවා - எயா யனவா- அவர் போகிறார்
- ඒගොල්ලෝ යනවා - ஏகொல்லோ யனவா- அவர்கள் போகிறார்கள்
இவ்வாறாக இரண்டு வசன அமைப்பிலேயே ஓர் கருத்துள்ள வசனம் உருவாக்கப்படுகின்றது.
கீழே உள்ள இரு வசனங்களையும் கவனித்துப் பாருங்கள். இதில் ஓர் மிக முக்கியமான விதியை உங்களுக்கு நான் குறிப்பிட முயல்கின்றேன். அது யாதெனில் தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் ஓர் வினைச்சொல்லை குறிப்பிடும்போது நாம் அதனை பயன்படுத்த முன்னர் எந்தப் பாலினத்திற்கு உரியது என்று முதலில் கவனிப்போம். உதாரணமாக எழுதுதல் என்ற ஓர் சொல்லை எடுத்துக்கொள்வோம். இதனை ஆணுக்கு பயன்படுத்துவது என்றால் எழுதினான் எனவும் பெண்ணுக்கு எனின் எழுதினாள் எனவும் வரும். இதில் நாம் பால்நிலைக்கு ஏற்ப (ஆண்பால், பெண்பால்) வசன அமைப்பு மாற்றமுறுவதை கவனித்துப்பாருங்கள். ஆனால் சிங்கள மொழியைப் பொறுத்தமட்டில் அவ்வாறாக ஓர் விதி அமைவதில்லை. රවි යනවා (ரவி யனவா) என்றால் ரவி போகின்றான் என்றும் මාලා යනවා (மாலா யனவா) என்றால் மாலா போகின்றாள் என்றும் அமைந்து விடும். தமிழைப்போல வசனம் மாற்றமுறாது. சிங்கள மொழியில் போகின்றாள், போகின்றான் என்பதற்கு යනවා (யனவா) என்றே இரு பாலாருக்கும் அமையும். இதைத்தவிர நாய், பூனை என விலங்குகளை குறிப்பிடும்போதும் அவ்வாறாகவே அமைகின்றது. இப்போது கீழே உள்ள வசனங்களை கவனித்துப்பாருங்கள்.
- රවි යනවා - ரவி யனவா- ரவி போகின்றான்
- මාලා යනවා - மாலா யனவா- மாலா போகின்றாள்
Click here and do the exercises about Basic Sinhala Sentence making
சிங்கள அடிப்படை வசனங்களை அமைப்பது தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட இங்கே சொடுக்கவும்.


Comments
Post a Comment