Adjectives in Sinhala
Adjectives in Sinhala
Basic Adjectives in Sinhala
சிங்கள மொழியில் பெயரடைகளை அறிவதும் பயன்படுத்துவதும் ஒரு சக்திவாய்ந்த திறமை ஆகும். காரணம் இவை சொற்களுக்கு உயிரூட்டி நாம் தெரிவிக்க விரும்பும் கருத்தின் ஆழத்தினை தெரியப்படுத்துகின்றன. "நல்லது", "கெட்டது", "சரி", "தவறு" போன்ற சில முக்கிய வார்த்தைகளை அறிந்துகொள்வதன் மூலம் வெவ்வேறு தலைப்புகளில் உரையாடல்களை நாம் சுயமாகவே மேற்கொள்ளலாம். பெயரடைகள் என்பது வாக்கியத்தின் அல்லது ஒரு விடயத்தின் சரியான நிலையை விவரிக்க அல்லது மாற்றப் பயன்படுத்தப்படும் சொற்கள் ஆகும்.
எடுத்துக்காட்டாக: நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்ற வசனத்தை எடுத்துக்கொள்வோம். இதில் மகிழ்ச்சியாக என்பது பெயரடை ஆகும். நீங்கள் எவ்வாநு உள்ளீர்கள் என வினவும்போது நான் இருக்கிறேன் என்று பதில் அளிப்பதற்கும், நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நான் இருக்கிறேன் என்றால் சாதாரணமாக இருப்பதனைக் குறிக்கும். நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்றால் எமது நிலையைக் கூறுவதனைக் குறிக்கும். எனவே சிங்களம் எளிதானது.
நீங்கள் அடிக்கடி கேட்க்கக்கூடிய அல்லது பயன்படுத்தக்கூடிய 20 பெயரடைகளின் பட்டியல் கீழே உள்ளது. அட்டவணையில் 4 நெடுவரிசைகள் (ஆங்கிலம், சிங்களம், எவ்வாறு உச்சரிப்பது என ஆங்கிலத்தில் மற்றும் தமிழ் அர்த்தம் என்பன) உள்ளன. ஒவ்வொரு வார்த்தையையும் படித்து மீண்டும் சொல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது மனப்பாடம் செய்வதற்கும் உங்கள் உச்சரிப்பை மேம்படுத்துவதற்கும் உதவும்.
| Adjective (English) | Sinhala Word | Sinhala Pronunciation | Tamil Word |
|---|---|---|---|
| Tall | උස | usa | உயரம் |
| Short | කොට | koṭa | கட்டை |
| Big | ලොකු | loku | பெரிய |
| Wide | පුළුල් | puḷul | அகலம் |
| Long | දිග | diga | நீண்ட |
| Small | කුඩා | kuḍā | சிறிய |
| Thick | මහත | mahata | பருமனான |
| Thin | සිහින් | sihin | மெலிந்த |
| New | අලුත් | aluth | புதிய |
| Old (opposite of new) | පරණ | paraṇa | பழைய |
| Cheap | ලාබයි | lābai | மலிவான |
| Expensive | මිල අධික | mila adhika | விலை உயர்ந்த |
| Young | තරුණ | taruṇa | இளமையான |
| Old (opposite of young) | වයසක | vayasaka | வயதான |
| Wrong | වැරදි | væradi | பிழை |
| Right (correct) | නිවැරදි | niværadi | சரி |
| Good | හොඳයි | hon̆dayi | நல்லது |
| Bad | නරකයි | narakayi | கெட்டது |
| Difficult | අමාරු | amāru | கடினமான |
| Easy | පහසු | pahasu | இலகுவான |
| English Sentence | Sinhala Sentence | Pronunciation (Sinhala Romanization) | Tamil Translation |
|---|---|---|---|
Am I right or wrong? |
මම හරිද වැරදිද? |
mama harida væradida? |
நான் சரியா அல்லது தவறா? |
Is he younger or older than you? |
ඔහු එබට වඩා බාලද වැඩිමල්ද? |
ohu ebaṭa vaḍā bālada væḍimalda? |
அவர் உன்னைவிட இளமையானவரா அல்லது வயது முதிர்ந்தவரா? |
Is the test easy or difficult? |
විභාගය අලුත්ද පරණද? |
vibhāgaya alutda paraṇada? |
தேர்வு எளிதானதா அல்லது கடினமானதா? |
Is this book new or old? |
මේක අලුත් පොතක්ද පරණ පොතක්ද? |
mēka alut potakda paraṇa potakda? |
இந்த புத்தகம் புதியதா அல்லது பழையதா? |
This is so expensive |
මේක හුඟක් ගණන් වැඩියි |
mēka hun̆gak gaṇan væḍiyi |
இது மிகவும் விலை உயர்ந்தது |
Note:- மேலே குறிப்பிட்ட வசனங்களில் நான் சரியா அல்லது தவறா என்ற வசனம் நேரடி சிங்கள மொழிபெயர்ப்பாகும். தமிழில் இந்த வசன அமைப்பைப் பற்றிக் கூறினால் ஒரு விடயத்தைப் பற்றி நீங்கள் எடுத்துக் கூறுகின்றீர்கள். கூறி முடித்தபிறகு நான் கூறியது சரியா அல்லது தவறா என்று கருத்துக் கேட்பதற்கே இந்த මම හරිද වැරදිද? என்ற மொழிநடை சிங்கள மொழியில் பயன்படுத்தப்படுகின்றது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
Comments
Post a Comment