Followers

Sinhala Alphabets in Tamil/ சிங்கள உயிர் எழுத்துக்கள் தமிழில்

Sinhala Alphabets in Tamil/ சிங்கள உயிர் எழுத்துக்கள் தமிழில் 

தமிழில் உள்ளதைப்போன்றே சிங்கள மொழியிலும் உயிர் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவை அடிப்படை எழுத்துக்களாகவும், மிக முக்கியமான ஆரம்ப எழுத்துக்களாகவும் உள்ளன. இவற்றை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்வதன் ஊடாக இலகுவாக ஏனைய சிங்கள எழுத்துக்களிலும் தேற்ச்சி பெற்று இலகுவாக சிங்கள மொழியை கற்கலாம்.

உங்களுக்கு இலகுவாக புரியத்தக்க வகையில் கீழே சிங்கள மொழியில் காணப்படும் உயிர் எழுத்துக்களிற்கு ஒப்பான தமிழ் எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன. இதன் உச்சரிப்பு தொனியை அறிந்து கொள்ள எமது வீடியோவை பார்வையிடுவதன் ஊடாக மேலதிக புரிதலை பெற்றுக்கொள்ளுங்கள்.

අ- அ

ආ- ஆ 

ඇ- அ(எ) (சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்து)

ඈ- ஆ (ஏ) (சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்து)

ඉ- இ

ඊ- ஈ

උ- உ

ඌ- ஊ

එ- எ

ඒ- ஏ

ඔ- ஒ

ඕ- ஓ

ඖ- ஔ

අං- அங்



ඇ- அ(எ), ඈ- ஆ(ஏ) என்பவை சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்துக்கள் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். இவ் எழுத்துக்கள் தமிழில் காணப்படுவதில்லை. ஆனால் சிங்கள மொழியில் உள்ளன.

சிங்கள மொழி எனப்படுவது இசை மற்றும் சந்த அமைப்பில் உச்சரிக்கப்படும் எழுத்து வகைகள் ஆகும். இதற்கேற்ப ஒவ்வொரு உச்சரிப்பிற்கும், ஒலி வடிவிற்கு ஏற்பவும் ஒவ்வொரு தனிப்பட்ட எழுத்துக்கள் காணப்படுகின்றன.


உதாரணமாக  பின்வரும் வசனங்களை கவனியுங்கள்.

ඇ எழுத்தை அடிப்படையாக கொண்ட சில வசனங்கள்.

  • ඇඳ (ænd) – Bed- அஎ(ந்)த
  • ඇස (æsa) – Eye- அஎச
  • ඇතුල (æthula) – Inside- அஎதுல
  • ඇත්ත (æththa) – Truth- அஎத்த
  • ඇණි (æni) – Rope- அஎணி
ඈ எழுத்தை அடிப்படையாக கொண்ட சில வசனங்கள்.
  • ඈල (æla) – Flood- அஏல
  • ඈඳ (ænd) – Pillow- அஏ(ந்)த
  • ඈතුල (æthula) – Interior, Inside- அஏதுல
  • ඈණ (æṇa) – Deer- அஏண
  • ඈක් (æk) – Singular- அஏக்
மேற்படி வசன அமைப்புக்களை கவனியுங்கள்.  இவற்றை உச்சரிப்பது சற்றே வித்தியாசமானது. தமிழில் உள்ளதைப்போன்று இவை அல்ல. காரணம் சிங்கள மொழியில் உச்சரிப்பிற்கு தக்கால்போல எழுத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால் தமிழில் ஓர் எழுத்தே பல்வேறான தொனிகளில்  உச்சரிக்கப்படும். தனது இடத்தைப் பொறுத்து இதன் ஒலி மற்றும் உச்சரிப்பு அமைப்பு மாறுபடும்.

உதாரணமாக பட்ம், கும் என்ற இரு சொற்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் “” எழுத்தை கவனமாக உச்சரியுங்கள்.

பட்ம், கும் என்ற இரு சொற்களிலும் உள்ள “ட” என்ற எழுத்தின் தொனியில் ஓர் குறுகிய, அழுத்தமான மாற்றங்கள் உண்டாவதை காணலாம். இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் யாதெனில் தமிழில் உள்ள எழுத்துக்கள் மாறவில்லை. மாறாக உச்சரிப்பு வடிவங்களே மாற்றமுறுகின்றன.

இதனைப்போன்று சிங்கள மொழியில் பெரும்பாலும் வருவதில்லை. உதாரணமாக පොකුණ (பொகுண), බෝලය(போ(B)லய) என்ற இரு வசனங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இவை தமிழில் முறையே குளம், பந்து என்று அர்த்தம் பெறும்.  

இதில் “ப” எனும் ஒலி பொதுவாக உள்ளது. පොකුණ, බෝලය - இச் சொற்களில் அழுத்தமாக்கப்பட்டுள்ள இரு எழுத்துக்களும் “பொ” என்ற அர்த்தத்தையே தரும். ஆயினும் எழுதும்போது உச்சரிப்பு வடிவிற்கேற்ப எழுத்துக்கள் மாற்றமுறுகின்றன.

இது சிங்களமொழியில் உள்ள ஓர் சிறப்பாகும். இவ்வாறாகவே ஒலியினை பொறுத்து எழுத்துக்கள் பல சிங்கள மொழியில் காணப்படுகின்றன.

ඇ, ඈ என்ற எழுத்துக்களும் அவ்வாறாகவே விசேட ஒலி உள்ள எழுத்துக்களாக காணப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

Christmas wishes in Sinhala, English and Tamil

Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil

Beginners Sinhala letters guide in Tamil

Contact Form

Name

Email *

Message *