Basic Sinhala grammar in Tamil
Basic Sinhala grammar in Tamil
Basic Spoken Sinhala in Tamil
சிங்கள மொழியில் தமிழ் மொழியைப்போன்றே பல்வேறு வசனங்களும் பல்வேறு வகையான இணைப்புச் சொற்களும் காணப்படுகின்றன.
இப்பகுதி சிங்களமொழிப் பயிற்சி முறைமையில் ஒரு முக்கிய பகுதியாகும். இது வரை நீங்கள் பல்வேறுவிதமான வார்த்தைகளை பயிற்சி செய்து இருப்பீர்கள். பல்வேறு வசனங்களை கேள்வியுற்றும் இருப்பீர்கள். வாக்கியங்களை பயிற்சி செய்த நீங்கள் இப்பகுதியிலிருந்து தர்க்க ரீதியாக சிங்களமொழி பேசுவதற்கான பயிற்சியில் ஈடுப்பட போகிறீர்கள். இப்பகுதியில் பெறும் பயிற்சியானது எச்சந்தர்ப்பத்திலும் சிங்களமொழி உரையாடலை புரிந்துக் கொள்ளவும் தர்க்கரீதியாக உங்கள் கருத்துக்களை சொல்லவும் உங்களுக்கு பெரும் துணையாகமையும் என்பது உறுதி.
சிங்கள வசனம்- ළමයා කෑම කෑවා නමුත් අත සේදුවේ නෑ.தமிழ் மூலம் சிங்கள வசனம்- (லமயா கம காவா நமுத் அ(த்)த சேதுவே ந).தமிழ் வசனம்- பிள்ளை சாப்பாடு சாப்பிட்டான் ஆனால் கை கழுவவில்லை.
மேலே உள்ள வசனத்தை கவனியுங்கள். இவை முறையே இரு வசனங்களின் சேர்ப்பாக காணப்படுகின்றன.
பிள்ளை சாப்பாடு சாப்பிட்டான். + கை கழுவவில்லை. என்ற இரு வசனங்களை இணைத்து எழுத அல்லது உச்சரிக்க ஆனால் எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது.
சிங்கள மொழியிலும் இவ்வாறாகவே பயன்படுத்தப்படுகின்றது.
சிங்கள வசனம்- ඔයා මුහුණ සෝදන්න නමුත් නාන්න එපා.தமிழ் மூலம் சிங்கள வசனம்-ஓயா முஹுன சோதன்ன நமுத் நான்ன எ(ப்)பா.தமிழ் வசனம்-நீங்கள் முகம் கழுவுங்கள் ஆனால் குளிக்க வேண்டாம்.
மேலதிக விளக்கத்திற்கு காணொளியை பார்வையிடுங்கள்.
ஆயினும்-එහෙත්/ ඒ වුනාට எஹெத் ஏவுனா(ட்)ட
சிங்கள வசனம்- මාමා ගාව සල්ලි තියෙනවා එහෙත් වියදම් කරන්නේ නෑ.தமிழ் மூலம் சிங்கள வசனம்-மாமா (g)காவ சல்லி தியெனவா எஹெத் வியதம் கரன்னே ந.தமிழ் வசனம்-மாமாவிடம் காசு உள்ளது ஆயினும் செலவு செய்யமாட்டார்.
சிங்கள வசனம்- මම බත් කෑවා එහෙත් බඩගිනියි.தமிழ் மூலம் சிங்கள வசனம்-மம (b)பத் கேவா எஹெத் (b)படகினிய்.தமிழ் வசனம்-நான் சோறு சாப்பிட்டேன் ஆயினும் பசிக்கிறது
சிங்கள வசனம்- නැන්දා අද එනවා කිව්වා එහෙත් ආවේ නෑ.தமிழ் மூலம் சிங்கள வசனம்-நந்தா அத எனவா கிவ்வா எஹெத் ஆவே ந.தமிழ் வசனம்-அத்தை இன்று வருவதாகச் சொன்னார் ஆயினும் வரவில்லை
சிங்கள வசனம்- උදේ හොඳට වැස්සා ඒ වුනාට ළමයි පාසල් ගියා.தமிழ் மூலம் சிங்கள வசனம்-உதே ஹொந்த(ட்)ட வெஸ்ஸா ஏவுனா(ட்)ட லமய் பாஸல் (g)கியா.தமிழ் வசனம்-காலையில் நன்றாக மழைப்பெய்தது ஆயினும் பிள்ளைகள் பாடசலைக்குப்போனார்கள்.
மேலதிக விளக்கத்திற்கு காணொளியை பார்வையிடுங்கள்.
இவ்வாறாக உங்கள் சிங்கள மொழி விருத்தியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல இந்த இணைப்பிடைச்சொற்கள் உங்களுக்கு உறு துணையாக அமையும். நீங்கள் அடிக்கடி பயிற்சி செய்து உங்கள் வாழ்வில் இதனை சேர்த்துக்கொள்ளும்பொழுது உங்களுக்கு இது இன்னும் இலகுவாக கற்றுக்கொள்ள சந்தர்ப்பத்தை வழங்கும்.
Comments
Post a Comment