Followers

Basic Sinhala Reading In Tamil

Basic Sinhala Reading In Tamil

சிங்கள மொழியை பயில்வது மிக மிக இலகுவான காரியங்களில் ஒன்றாகும். ஆம். காரணம் எமது தமிழ் மொழியைப் போன்றே சிங்கள மொழியிலும் பல்வேறுபட்ட ஒற்றுமைகள் காணப்படுகின்றன. தமிழை தாய் மொழியாக கொண்ட எமக்கும் சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்ட எமது சிங்கள சகோதரர்களுக்கும் பல்வேறு பட்ட ஒற்றுமைகளை தமிழ் மொழியும் சிங்கள மொழியும் ஏற்படுத்துகின்றன.

நாம் தற்போது வாசிப்பு பயிற்சியை மேற்கொள்ள முயல்வோம். உங்களுக்கு சிங்கள மொழிக்கான தமிழ் உச்சரிப்புக்களை முடிந்த அளவு துல்லியமாக கொடுக்க முயற்சி செய்துள்ளேன்.

கீழ்வரும் பகுதியானது ஓர் பாடசாலை உரையாடலை அடிப்படையாக யெகண்டதாகும். 

ආයුබෝවන් ළමයි.- ஆயுபோவன் ளமயி என்று இதன் உச்சரிப்பு அமையும். 
இதன் அர்த்தம் வணக்கம் பிள்ளைகள் என்பதாகும். 
ஆயுபோவன் (ආයුබෝවන්)  என்றால் வணக்கம். 
ளமயி (ළමයි) என்றால் பிள்ளைகள்.


ආයුබෝවන් ගුරුතුමී.-ஆயுபோவன் குறுதுமி என்று இதன் உச்சரிப்பு அமையும். 
இதற்கு வணக்கம் ஆசிரியயை என்று அர்த்தம். 
குறுதுமி (ගුරුතුමී) என்றால் ஆசிரியயை-பெண்பால் என்றும் குறுதுமா என்றால் ஆசிரியர்- ஆண்பால் என்றும் பொருள் படும்.


අද අපට අලුත් යාළුවෙක්. அத அபட அலுத் யாழுவெக். 
இன்று எமக்கு புதிய நண்பர் உள்ளார் என்று தமிழில் இதன் அர்த்தம் அமையும். 
அத (අද) என்றால் இன்று. 
அபட (අපට) என்றால் எங்களுக்கு.
அலுத் (අලුත්) என்றால் புதிய.
யாழுவக் යාළුවෙක් என்றால் நண்பன் ஒருவன் என்று அர்த்தம்.


අපි එයා ගැන අහමු. அபி எயா கென அகமு என்றால் நாம் அவரைப் பற்றிக் கேட்போம் என்று தமிழில் வரும். 
அபி (අපි) என்றால் நாங்கள்.
எயா එයා என்றால் அவர்.
கென அகமு (ගැන අහමු) என்றால் பற்றிக் கேட்போம் என்று அர்த்தம்.


මුලින් ම මා ගැන කියන්නම්. முலின் ம மா கென கியன்னம் என்றால் முதலில், என்னைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று அர்த்தம்.


මගේ නම දීපානි. மகே நம தீபானி என்றால் எனது பெயர் தீபானி. 
மகே (මගේ) என்றால் எனது.
நம (නම) என்றால் பெயர்.


මගේ වයස අවුරුදු විසි අටයි. மகே வயச அவுறுது விசி அட்டய் என்றால் எனது வயது இருபத்தி எட்டு என்பதாகும்.


මගේ ගම කොග්ගල. மகே கம கொக்கல என்றால் எனது ஊர் கொக்கல என்பதாகும். 


අපි දැන් අලුත් යාළුවා ගැන අහමු. அபி தன் அலுத் யாழுவா கென யகமு என்பதன் அர்த்தம் இப்போது புதிய நண்பரைப் பற்றிக் கேட்போம் என்பதாகும். 


මගේ නම සහන්. மகே நம சகன் என்பதன் அர்த்தம் என் பெயர் சஹான்.


මම ඉගෙන ගන්නෙ හයේ පන්තියේ. மம இகென்ன கன்னே கயே பன்தியே என்பதன் அர்த்தம் நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன் என்பதாகும்.


මගේ වයස අවුරුදු එකොළහයි. மகே வயச அவுறுது எகொளகய் என்பதன் அர்த்தம் எனக்கு பதினொரு வயது.


මගේ ගම මතුගම. மகே கம மதுகம என்பதன் அர்த்தம் என்னுடைய ஊர் மதுகம என்பதாகும்.


ආ ... දැන් කුමාරි කියන්න. ஆ... தன் குமாரி கியன்ன என்பதன் அர்த்தம் இப்போது குமாரி சொல்லுங்கள் என்பதாகும்.


මම කුමාරි. மம குமாரி என்றால் நான் குமாரி.


මට අවුරුදු එකොළහයි. மட அவுறுது எகொளகய் என்பதன் அர்த்தம் எனக்கு பதினொரு வயது என்பதாகும்.


මගේ පාසල සීතාවක මහා විද්‍යාලය. மகே பாசல சீதாவாக்க மகா வித்தியாலய என்பதன் அர்த்தம் எனது பாடசாலை சீதாவாக்க வித்தியாலயம் என்பதாகும்.


මගේ ගම මල්වාන. மகே கம மல்வான என்பதன் அர்த்தம் என்னுடைய ஊர் மல்வானை என்பதாகும்.



மேலதிக விளக்கங்களுக்கு வீடியோவை பார்வையிடுங்கள்.





 For more Sinhala learning videos, click here

மேலதிக சிங்கள மொழி சம்மந்தமான வீடியோக்களுக்கு இங்கே அழுத்துங்கள்.

  • ආයුබෝවන්- வணக்கம்
  • එකොළහයි- பதினொன்று
  • කියන්න- சொல்லுங்கள்
  • ගම- ஊர்
  • ගුරුතුමී- ஆசிரியை
  • අද-இன்று
  • අපට-எங்களுக்கு
  • වයස-வயது
  • මගේ- என்னுடைய
  • මට- எனக்கு
  • අවුරුදු- வருடங்கள்
  • දැන්- இப்போது
  • පාසල- பாடசாலை
  • විසි අටයි- இருபத்தியெட்டு



Comments

Popular posts from this blog

Christmas wishes in Sinhala, English and Tamil

Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil

Beginners Sinhala letters guide in Tamil

Contact Form

Name

Email *

Message *