Sinhala Alphabets in Tamil/ சிங்கள உயிர் எழுத்துக்கள் தமிழில்
Sinhala Alphabets in Tamil/ சிங்கள உயிர் எழுத்துக்கள் தமிழில் தமிழில் உள்ளதைப்போன்றே சிங்கள மொழியிலும் உயிர் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவை அடிப்படை எழுத்துக்களாகவும், மிக முக்கியமான ஆரம்ப எழுத்துக்களாகவும் உள்ளன. இவற்றை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்வதன் ஊடாக இலகுவாக ஏனைய சிங்கள எழுத்துக்களிலும் தேற்ச்சி பெற்று இலகுவாக சிங்கள மொழியை கற்கலாம். உங்களுக்கு இலகுவாக புரியத்தக்க வகையில் கீழே சிங்கள மொழியில் காணப்படும் உயிர் எழுத்துக்களிற்கு ஒப்பான தமிழ் எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன. இதன் உச்சரிப்பு தொனியை அறிந்து கொள்ள எமது வீடியோவை பார்வையிடுவதன் ஊடாக மேலதிக புரிதலை பெற்றுக்கொள்ளுங்கள். අ- அ ආ- ஆ ඇ- அ(எ) (சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்து) ඈ- ஆ (ஏ) (சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்து) ඉ- இ ඊ- ஈ උ- உ ඌ- ஊ එ- எ ඒ- ஏ ඔ- ஒ ඕ- ஓ ඖ- ஔ අං- அங் ඇ- அ(எ), ඈ- ஆ(ஏ) என்பவை சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்துக்கள் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். இவ் எழுத்துக்கள் தமிழில் காணப்படுவதில்லை. ஆனால் சிங்கள மொழியில் உள்ளன. சிங்கள மொழி எனப்படுவது இ...