Posts

Showing posts from November, 2025

Followers

Adjectives in Sinhala

Adjectives  in Sinhala Basic Adjectives in Sinhala  சிங்கள மொழியில் பெயரடைகளை அறிவதும் பயன்படுத்துவதும் ஒரு சக்திவாய்ந்த திறமை ஆகும். காரணம் இவை சொற்களுக்கு உயிரூட்டி நாம் தெரிவிக்க விரும்பும் கருத்தின் ஆழத்தினை தெரியப்படுத்துகின்றன. "நல்லது", "கெட்டது", "சரி", "தவறு" போன்ற சில முக்கிய வார்த்தைகளை அறிந்துகொள்வதன் மூலம் வெவ்வேறு தலைப்புகளில் உரையாடல்களை நாம் சுயமாகவே மேற்கொள்ளலாம். பெயரடைகள் என்பது வாக்கியத்தின் அல்லது ஒரு விடயத்தின் சரியான நிலையை விவரிக்க அல்லது மாற்றப் பயன்படுத்தப்படும் சொற்கள் ஆகும்.   எடுத்துக்காட்டாக: நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்ற வசனத்தை எடுத்துக்கொள்வோம். இதில் மகிழ்ச்சியாக என்பது பெயரடை ஆகும். நீங்கள் எவ்வாநு உள்ளீர்கள் என வினவும்போது நான் இருக்கிறேன் என்று பதில் அளிப்பதற்கும், நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நான் இருக்கிறேன் என்றால் சாதாரணமாக இருப்பதனைக் குறிக்கும். நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்றால் எமது நிலையைக் கூறுவதனைக் குறிக்கும். எனவே சிங்களம் எளிதானது. நீங்கள் அடிக்க...

சிங்களப் பெயரெச்சங்கள் (Sinhala Adjectives)

சிங்களப் பெயரெச்சங்கள் (Sinhala Adjectives) பெயரெச்சங்கள் எனப்படுபவை தமிழ் மொழியில் மாத்திரமன்றி அனைத்து மொழிகளிலும் காணப்படும் ஓர் முக்கியமான பகுதியாகும். காரணம் பெயரெச்சங்கள் ஓர் பொருளின் அல்லது ஒரு விடயத்தின் விபரிப்பினை எடுத்துக் கூறும் ஓர் சொற்கூட்ட அமைப்பு என நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். மற்றைய மொழிகளினைப் போன்றே சிங்கள மொழியிலும் பெயரெச்சங்களின் அமைப்பும் பங்கும் மிக முக்கியமானது. ஏனெனில் சிங்கள மொழியிலும் அன்றாட பயன்பாட்டில் இவை முக்கிய இடம் பெறுகின்றன. சிங்கள பெயரெச்சங்களை நன்கு கற்றுக்கொள்ளும் போது, அன்றாட வாழ்வில் சிங்கள மொழியை நன்கு கையாளும் திறனும், சிங்கள மொழின் இலகுத்தன்மையும், சரியாக எவ்வாறு மொழியைப் பிரயோகிக்க வேண்டும் என்ற புரிதலும் எமக்கு ஏற்படும்.  முதலில், சிங்கள இலக்கணத்தில் பெயரெச்சங்கள் எவ்வாறாக செயலாற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  சிங்களப் பெயரெச்சங்கள் என்பது ஒரு நபரை அல்லது பொருளை விவரிக்கும் சொற்களாகும். கீழே சில உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைக் கவனிப்போம். English Sinhala தமிழ் ஒலிப்பாடு தமிழ் அர்த்தம் A djectives ...

சிங்கள வரிசை எண்கள் (Ordinal Numbers)

Image
சிங்கள வரிசை எண்கள் (Ordinal Numbers)  சிங்கள மொழியை வாசிப்பதிலும் பேசுவதிலும், வரிசை எண்கள் (Ordinal Numbers) மிக முக்கியமானவை. பொதுவாக, first, second, third போன்ற சொற்கள் ஓர் தானத்தின் “இடத்தை” அல்லது “வரிசையை” குறிக்கின்றன. உதாரணமாக முதலாம் இடம், நான்காவது வரிசை, எட்டாவது நபர், ஆறாவது புகையிரத நிலையம் என இவற்றை எமது தினசரி நாட்களில் பயன்படுத்துகின்றோம்.  இவை எண்ணிக்கையை  (Number countings)   அல்ல, மாறாக  முடிவிடத்தை அல்லது தரத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சிங்கள மொழியிலும் இதேபோல் தனித்துவமான வரிசை எண்கள் உள்ளன. இவற்றை கற்றுக்கொள்வது தினசரி உரையாடல்களில், கல்வி, தேதி, விளையாட்டு, பட்டியல் வரிசை போன்ற சூழல்களில் எமது தேவையை நிறைவேற்ற மிகவும் உதவும். சிங்கள வரிசை எண்கள் – அறிமுகம் சிங்களத்தில் Ordinal Numbers என்பதற்கு:  veni lesa yedena aṁka – වෙනි ලෙස යෙදෙන අංක- வெனி லெச யேதென அங்க எனஅதாவது தமிழில்: “வரிசையை வெளிப்படுத்தும் எண்கள்” என குறிப்பிடப்படுகின்றன. இவை எதற்குப் பயன்படுத்தப்படுகின்றன? ஒருவரின் தரவ...

Numbers in Sinhala

Image
Numbers in Sinhala இரண்டாம் மொழியாக சிங்கள மொழி கற்பவர்களுக்கான எண்கள் சிங்களத்தில் சிங்கள மொழியை கற்பதற்கான பயணத்தில், எண்கள் (Numbers) மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. அன்றாட உரையாடல்கள், கணக்குகள், தேதி, நேரம் கூறுதல், விலைகளைப் பற்றிப் பேசுதல், பொருட்களை எண்ணுதல் போன்ற அனைத்திலும் எண்கள் தவிர்க்க முடியாதவை. அதனால், சிங்கள எண்களின் அமைப்பு மற்றும் உச்சரிப்பு முறையை புரிந்துகொள்வது மொழிக்கற்றலில் ஒரு வலுவான அடித்தளமாகும். இந்த கட்டுரையில், சிங்கள அடிப்படை எண்கள் (Cardinal Numbers) எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அவை எவ்வாறு உருவாகின்றன என்பதை எளிமையாகவும் விளக்கமான முறையிலும் பார்ப்போம். Flowers சிங்கள எண்களின் முக்கியத்துவம் எண்கள் என்பவை எந்த மொழியிலும் “எத்தனை?” எனும் கேள்விக்கு பதிலளிக்கும் அடிப்படை சொற்கள் ஆகும்.  உதாரணமாக  எத்தனை மலர்கள் மலர்ந்துள்ளன? எத்தனை பறவைகள் வானில் பறக்கின்றன? எத்தனை தொலைபேசிகள் உங்களிடம் உள்ளது? எத்தனை மணிக்கு நான் வர வேண்டும்? எவ்வளவு தூரத்தில் பாடசாலை உள்ளது? எவ்வளவு ஆழத்தில் கிணறு தோண்டப்பட்டுள்ளது? வீடு கட்டப்பட எத்தனை கற்கள் வேண்...

Basic Sinhala Sentences Making

Image
Basic Sinhala Sentences Making  சிங்கள மொழியை பொறுத்த அளவில் வசனங்களை உருவாக்குவது மிக இலகுவானது. குறிப்பாக இரண்டு வாக்கியங்களை மாத்திரம் பயன்படுத்தி அர்த்தமுள்ள வசனங்களை உருவாக்கிவிட முடியும். இவ்வாறாக எளிமையான வசனங்களை உருவாக்கி கதைப்பதற்கும், எழுதுவதற்கும் நீங்கள் சிங்களச் சொற்களை அதுவும் அடிப்படைச் சொற்களை தெரிந்து வைத்திருப்பதே போதுமானது.  பின்வரும் உதாரணங்களைக் கவனித்துப் பாருங்கள்.  මම යනවා - மம யனவா- நான் போகின்றேன் අපි යනවා - அபி யனவா-நாங்கள் போகின்றோம் ඔයා යනවා- ஓயா யனவா- நீ போகின்றாய் ඔයාලා යනවා - ஓயாலா யனவா- நீங்கள் போகின்றீர்கள் රවි යනවා - ரவி யனவா- ரவி போகின்றான் මාලා යනවා - மாலா யனவா- மாலா போகின்றாள் එයා යනවා - எயா யனவா- அவர் போகிறார்  ඒගොල්ලෝ යනවා - ஏகொல்லோ யனவா- அவர்கள் போகிறார்கள் இவ்வாறாக இரண்டு வசன அமைப்பிலேயே ஓர் கருத்துள்ள வசனம் உருவாக்கப்படுகின்றது.  கீழே உள்ள இரு வசனங்களையும் கவனித்துப் பாருங்கள். இதில் ஓர் மிக முக்கியமான விதியை உங்களுக்கு நான் குறிப்பிட முயல்கின்றேன். அது யாதெனில் தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் ஓர் வினைச்சொல்லை குறிப...

Beginners Sinhala letters guide in Tamil

Image
Beginners Sinhala letters guide in Tamil இலங்கையின் பிரதான மொழிகளில் ஒன்றான சிங்கள மொழி , இந்திய-ஆரிய மொழிக் குடும்பையைச் சேர்ந்தது. இதன் எழுத்துமுறை பல நூற்றாண்டுகளாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழ் பேசுவோருக்கு சிங்கள எழுத்துகளைப் புரிந்துகொள்வது சற்று சவாலாக இருந்தாலும், அதன் முதற்படிகளை அறிந்துகொண்டால் மொழியின் அழகை எளிதில் உணர முடியும். குறிப்பாக சிங்கள மொழியானது தமிழ் மொழியோடு மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டது. இப் பகுதியில், சிங்கள எழுத்துக்களின் முதல் எழுத்துகள் (உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள்) , அவற்றின் உச்சரிப்பு, அமைப்பு மற்றும்  எளிய கற்றல் வழிமுறைகளைப் பற்றிப்பார்ப்போம். Sinhala letters and Tamil letters Tamil Letter Sinhala Letter Pronunciation அ - අ a ஆ - ආ aa (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்) இ - ඉ e ஈ - ඊ ee  (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்) உ - උ u ஊ - ඌ uu  (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்) எ - එ ay ஏ - ඒ aay  (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்) ஐ - ඓ ai ஒ - ඔ o ஓ - ඕ oo  (உச்சரிப்பு சற்று நீண்டதாக வரும்) ஔ - ...

Learn Sinhala in Tamil

Image
Learn Sinhala in Tamil Oil names in Sinhala to Tamil சிங்கள மொழியினை நாம் சரியாகவும் தெளிவாகவும் விரைவாகவும் கற்க வேண்டுமாயின் எழுது அன்றாட வாழ்க்கையில் நாம் இலகுவாக, அடிக்கடி உபயோகிக்கும் சாதாரண சொற்களை சிங்கள மொழியில் சரியாக தெரிந்து கொண்டு அவற்றை அன்றாடம் பயன்படுத்துவது மிக முக்கியமானதொன்றாகும். அந்த வகையில் இன்று நாம் எமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எண்ணை வகைகளைப்பற்றிக் கற்போம்.  Oil names Sinhala to Tamil மண்ணெய் - பூமி தெல்.  தேங்காய் எண்னை- பொல் தெல்.   டீசல் -    டீசல்.  எள் எண்ணை - தல தெல்.   கடலை எண்ணை - ரடகயு தெல்.   சூரியகாந்தி எண்ணெ- சூர்யகாந்த தெல் . பெற்றோல்- பெற்றொல் இங்கே தெல் என்றால் எண்ணை என்பது பொருள். கடலை எண்ணை என்றால் நடகயு தெல் என குறிப்பிட்டிருந்தேன். ஆனால் நாம் பயன்படுத்தும் கச்சான் என்பதை சிங்கள மொழியில் ரடகயு என அழைப்பர். கடலை எண்ணை கச்சானில் இருந்து எடுக்கப்படுவதனால் ரடகயு தெல் என அழைக்கின்றனர். சாதாரண கடலையை கடல என்று சிங்கள் மொழியில் அழைப்பர்.

Sinhala Letter Tips In Tamil

Image
Sinhala Letter Tips In Tamil தமிழ் மொழியில் தமிழ் மொழியை ஓர் சரியான கட்டுக்குள் வைத்திருக்க இலக்கண, இலக்கிய விதிகள் காணப்படுகின்றன. அதனைப் போன்றே சிங்கள மொழியிலும் இலக்கண, இலக்கிய விதிகள் காணப்படுகின்றன.  இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைப் பயிலும் எமக்கு இவ்விதிகள் பெரிய சுமையாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக இலகுவான வழிகளை கற்று வைப்பது எமக்கு சிறந்த பயனை கற்றலில் தரக்கூடும்.  அந்த வகையில் இந்தப்பகுதியில் சிங்கள எழுத்துக்களைப் பற்றிய இலகு குறிப்பு முறை ஒன்றைக் காண்போம்.  சிங்கள மொழியில் சில எழுத்துக்களை எழுதுவதற்கென வித்தியாசமான பல விதிகள் உள்ளன.  தமிழில் "ம்" "ப்” “த்” என எழுத்துக்களை எழுதும்போது "்" எனும்குமியீட்ட மாத்திரம் பயன்படுத்தி “ப” எனும் எழுத்தை “ப்” எனவும், “த” எனும் எழுத்தை “த்” எனவும் மாற்றலாம். இந்த குறியீட்டை புள்ளி அல்லது குற்று என தமிழில் அழைப்பர். இந்த குறியீட்டை அனைத்து எழுத்துக்களுக்கும் பயன்படுத்த முடியும். சிங்கள மொழியைப் பொறுத்த வரை "்" புள்ளி என்ற இந்தக் குறியீட்டை க(Ha)ல் கிரீம என்று அழைப்பர். சிங்கள மொழியில் "்" எனும...

Sinhala conversation in Bakery

Image
Sinhala conversation in Bakery உரையாடல்கள் எனப்படுபவை எல்லா மொழிகளிலும் ஓர் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உதாரணமாக மொழிகள் உருவாக்கப்பட்டதற்கான அடிப்படை காரணமே தொடர்பு கொள்வதற்காகத்தான் என நாம் எடுத்துக்கொள்ளலாம். இந்தப்பகுதியில் நாம் சிங்கள மொழியில் எவ்வாறாக ஓர் வெதுப்பகத்தில் உரையாடல் மேற்கொள்ளலாம் என்பதைப்பற்றி கற்போம். இதில் மிக முக்கியமான அடிப்படைச் சொற்கள் மற்றும் அடிப்படை உரையாடல்களைப்பற்றி பார்ப்போம்.  சிங்கள மொழியில் அதாவது உரையாடல் மொழியில் வெதுப்பகத்தை பேக்கறி என்றே பொதுவாக அழைக்கின்றனர். வெதுப்பகத்தில் நிச்சயமாக சூடு அல்லது வெப்பம் ஓர் அத்தியாவசியமான விடயமாகும். சிங்கள மொழியில் சூடு அல்லது வெப்பத்தை உணுசும் என அழைப்பர். அடுத்த அத்தியாவசியமான விடயம் அடுப்பு. அதிலும் விறகடுப்பு எனப்படுவது பாரம்பரியமான ஓர் விடயமாகும். விறகு அடுப்பிற்கு தர உதுன என அழைப்பர். அதில் தர எனப்படுவது விறகு என பொருள்படும். அடுப்பு என்பதற்கு உந்துன் அல்லது  லிப என்றொரு பொருளும் காணப்படுகின்றது. அடுத்தபடியாக பாண் எனும் உணவுப்பண்டத்தை பாண் எனவே சிங்கள மொழியில் அழைக்கின்றனர். பணிஸ் எனப்படுவதையும் அவ...

Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil

Image
Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil மொழியைப் பொறுத்தவரை இலக்கணம் மற்றும் இலக்கியம் ஆகியவை மொழியினை கட்டமைக்கும் இரு அச்சாணியாக தொழிற்பட்டு வருகின்றன. காரணம் மொழியினை நாம் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு அர்த்தத்துடன் நயம் மிக்கதாக மாற்றுவது இலக்கண இலக்கியமாகும்.  இரண்டாம் மொழியாக சிங்களம் கற்கும் எமக்கு மிக ஆழமான இலக்கிய இலக்கணங்கள் தற்போது தேவைப்படாது. இருப்பினும் எமது அன்றாட சிங்கள மொழி பயன்பாட்டிற்காக அடிப்படை சிங்கள இலக்கண இலக்கியங்களை கற்று வைப்பது பொருத்தமானது. அந்தவகையில் காலம் காட்டும் அடிப்படை சொற்களை நாம் கற்பது பொருத்தமானது. குறிப்பாக இறந்தகால, நிகழ்கால, எதிர்கால மற்றும் ஏவல் சொற்களை கற்பது எமக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். பின்வரும் பகுதிகளில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் ஏவல் வசனங்களை நோக்குவோம். அடிப்படை சிங்களம் அடிப்படை சிங்களம் மேலே தரப்பட்ட வசனங்களைக் கவனித்துப்பாருங்கள்.  කළා, කරනවා, කරයි, කරන්න எனும்  மாற்றங்கள் முறையாக இடம்பெறுவதை அவதானியுங்கள். இவை அடிப்படையான சொற்களாகும். இவற்றில் இடம்...

Contact Form

Name

Email *

Message *