சிங்கள உயிர் எழுத்துக்கள் (ප්‍රාණාක්‍ෂර)

சிங்கள உயிர் எழுத்துக்கள் (ප්‍රාණාක්‍ෂර)

சிங்கள மொழியை சரியாக புரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் அடிப்படையில் எழுத்துக்களிலிருந்து தொடங்குவதே மிகச் சிறந்த வழியாகும்.

சிங்கள மொழியில் எழுத்துக்கள் இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன:

  1. பிராணா க்ஷர / பணகுரு (ප්‍රාණාක්‍ෂර / පණකුරු) – உயிர் எழுத்துக்கள்

  2. காத்ரா க்ஷர / கதகுரு (ගාත්‍රාක්‍ෂර / ගතකුරු) – மெய் எழுத்துக்கள்

இன்றைய பதிவில், தமிழ் உயிர் எழுத்துக்களைப் போன்றே அமைந்த 12 முக்கிய சிங்கள உயிர் எழுத்துக்களையும், அவற்றைக் கொண்டு தொடங்கும் சில அன்றாட பயன்பாட்டுச் சொற்களையும் பார்ப்போம்!

1. අ - அ

  • අම්මා (அம்மா) – அம்மா

  • අත (அத) – கை

  • අද (அத) – இன்று

  • අර (அர) – அந்த

  • අල (அல) – கிழங்கு

  • අංකය (அங்கய) – இலக்கம் / எண்

  • අපට (அபட) – எங்களுக்கு

  • අහස (அஹஸ) – ஆகாயம் / வானம்

  • අදහස (அதஹஸ) – கருத்து

2. ආ - ஆ

  • ආගම (ஆகம) – சமயம் / மதம்

  • ආසනය (ஆஸநய) – இருக்கை

  • ආනන්ද (ஆநந்த) – ஆனந்த (பெயர்)

3. ඉ - இ

  • ඉණ (இண) – இடுப்பு

  • ඉර (இர) – சூரியன்

  • ඉඟ (இங) – இடை / இடுப்பு

  • ඉඩම (இடம) – நிலம் / காணி

  • ඉන්දියාව (இந்தியாவ) – இந்தியா

4. ඊ - ஈ

  • ඊට (ஈட) – அதற்கு

  • ඊය (ஈய) – அம்பு

  • ඊළඟ (ஈளங) – அடுத்த

  • ඊශ්වරී (ஈஷ்வரீ) – ஈஸ்வரி

5. උ - உ

  • උස (உஸ) – உயரம்

  • උඩ (உட) – மேலே

  • උණ (உண) – காய்ச்சல்

  • උයන (உயந) – பூங்கா

  • උරය (உரய) – உறை / பை

  • උපකරණය (உபகரணய) – உபகரணம் / கருவி

6. ඌ - ஊ

  • ඌව (ஊவ) – ஊவா (மாகாணம்)

  • ඌට (ஊட) – அவனுக்கு / அதற்கு

7. එ - எ

  • එක (எக) – ஒன்று

  • එම (எம) – அந்த

  • එය (எய) – அது

  • එකතු (எகது) – ஒன்றுசேர்த்தல்

  • එතන (எதந) – அவ்விடத்தில்

8. ඒ - ஏ

  • ඒක (ேக) – அது / உது

  • ඒකල (ேகல) – ஏக்கலை (இடப் பெயர்)

9. ඓ - ஐ

  • ඓරාවත (ஐராவத) – ஐராவதம் (யானை)

10. ඔ - ஒ

  • ඔබ (ஒப) – நீங்கள்

  • ඔය (ஒய) – உந்த / அந்த

  • ඔතන (ஒதந) – உந்த இடத்தில் / அவ்விடத்தில்

11. ඕ - ஓ

  • ඕක (ஓக) – அது / உது

12. ඖ - ஔ

  • ඖෂධ (ஔஷத) – மருந்து




சிங்கள எழுத்துதமிழ் ஒலிப்புமாதிரிச் சொல்தமிழ் பொருள்
අම්මා (அம்மா)அம்மா
ආගම (ஆகம)சமயம்
ඉර (இர)சூரியன்
ඊය (ஈய)அம்பு
උස (உஸ)உயரம்
ඌට (ஊட)அதற்கு
එක (எக)ஒன்று
ඒක (ேக)அது
ඓරාවත (ஐராவத)ஐராவதம்
ඔබ (ஒப)நீங்கள்
ඕක (ஓக)அது
ඖෂධ (ஔෂத)மருந்து

சிங்கள உச்சரிப்பைச் சரியாகக் பழக இந்த சொற்களைத் தினமும் எழுதியும் சொற்களை உச்சரித்தும் பயிற்சிகளைச் செய்யுங்கள். அடுத்த பகுதியில் மெய் எழுத்துக்கள் (ගාත්‍රාක්‍ෂර) பற்றி விரிவாகப் பார்ப்போம்!

இப்பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!


























































Comments

Popular posts from this blog

New Year Wishes in Sinhala, English and Tamil

Christmas wishes in Sinhala, English and Tamil

Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil