Posts

Sinhala Alphabets in Tamil/ சிங்கள உயிர் எழுத்துக்கள் தமிழில்

Image
Sinhala Alphabets in Tamil/ சிங்கள உயிர் எழுத்துக்கள் தமிழில்  தமிழில் உள்ளதைப்போன்றே சிங்கள மொழியிலும் உயிர் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவை அடிப்படை எழுத்துக்களாகவும், மிக முக்கியமான ஆரம்ப எழுத்துக்களாகவும் உள்ளன. இவற்றை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்வதன் ஊடாக இலகுவாக ஏனைய சிங்கள எழுத்துக்களிலும் தேற்ச்சி பெற்று இலகுவாக சிங்கள மொழியை கற்கலாம். உங்களுக்கு இலகுவாக புரியத்தக்க வகையில் கீழே சிங்கள மொழியில் காணப்படும் உயிர் எழுத்துக்களிற்கு ஒப்பான தமிழ் எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன. இதன் உச்சரிப்பு தொனியை அறிந்து கொள்ள எமது வீடியோவை பார்வையிடுவதன் ஊடாக மேலதிக புரிதலை பெற்றுக்கொள்ளுங்கள். අ- அ ආ- ஆ  ඇ- அ(எ)  (சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்து) ඈ- ஆ   (ஏ) (சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்து) ඉ- இ ඊ- ஈ උ- உ ඌ- ஊ එ- எ ඒ- ஏ ඔ- ஒ ඕ- ஓ ඖ- ஔ අං- அங் ඇ- அ(எ),  ඈ- ஆ(ஏ)  என்பவை சற்று வித்தியாசமான உச்சரிப்பை கொண்ட எழுத்துக்கள் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். இவ் எழுத்துக்கள் தமிழில் காணப்படுவதில்லை. ஆனால் சிங்கள மொழியில் உள்ளன. சிங்கள மொழி எனப்படுவது இ...

Colours in Sinhala to Tamil

Image
Colours in Sinhala to Tamil வணக்கம் நண்பர்களே....! இன்று நாம் கற்க இருக்கும் விடயம் வர்ணங்களை பற்றியதாகும். ஆம். சிங்கள மொழியில் எவ்வாறாக நாம் வண்ணங்களை அழைப்பது என்பதனை காண்போம். කළු      கழு      கருப்பு සුදු           சுது     வெள்ளை රතු         ர(த்)து   சிகப்பு. කහ      கஹ     மஞ்சள் කොළ      கொள      பச்சை නිල්   நில்      நீலம் අළු පාට      அழுசாம்பல்      நிறம் දම්           (dh)    தம்           ஊதா දුඹුරු පාට      (dh)தும்பரு பா(ட்)ட      பழுப்பு இதில் ஒரு விடயத்தை கவனித்துக்கொள்ளுங்கள். පාට-பா(ட்)ட என்றால் தமிழில் நிறம் என்று அர்த்தம். எனவே மேலே குறிப்பிட்ட நிறங்களின் பெயர்களோடு  පාට-பா(ட்)ட எனும் வசனத்தை இணைக்கும்போது நீங்கள் நிறம் எனும் அர்த்தத்தை கொ...

Basic Sinhala grammar in Tamil

Image
Basic Sinhala grammar in Tamil Basic Spoken Sinhala in Tamil சிங்கள மொழியில் தமிழ் மொழியைப்போன்றே பல்வேறு வசனங்களும் பல்வேறு வகையான இணைப்புச் சொற்களும் காணப்படுகின்றன.  இப்பகுதி சிங்களமொழிப் பயிற்சி முறைமையில் ஒரு முக்கிய பகுதியாகும். இது வரை நீங்கள் பல்வேறுவிதமான வார்த்தைகளை பயிற்சி செய்து இருப்பீர்கள். பல்வேறு வசனங்களை கேள்வியுற்றும் இருப்பீர்கள். வாக்கியங்களை பயிற்சி செய்த நீங்கள் இப்பகுதியிலிருந்து தர்க்க ரீதியாக சிங்களமொழி பேசுவதற்கான பயிற்சியில் ஈடுப்பட போகிறீர்கள் . இப்பகுதியில் பெறும் பயிற்சியானது எச்சந்தர்ப்பத்திலும் சிங்களமொழி உரையாடலை புரிந்துக் கொள்ளவும் தர்க்கரீதியாக உங்கள் கருத்துக்களை சொல்லவும் உங்களுக்கு பெரும் துணையாகமையும் என்பது உறுதி. இப்பகுதியில் ஆனால் மற்றும் ஆயினும் ஆகிய இரு சொற்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றியும் நீங்கள் கற்கப்போகிறீர்கள். இவை சிங்கள மொழியை நீங்கள் இலகுவாக விளங்கிக்கொள்வதற்கும் இலகுவாக  கதைப்பதற்கும் உங்களுக்கு உதவி புரியும். காரணம் நாம் எத்தனை வசனங்களையும் மனனம் செய்துகொள்ள முடியும். ஆயினும் கற்றுக்கொண்ட வசனங்களை ...

Second Language Sinhala Learning Motivation

Image
Second Language Sinhala Learning Motivation நீங்கள் ஏன் சிங்களம் கற்க வேண்டும்? இந்த கேள்விக்கு உங்களிடம் பல பதில்கள் இருக்கலாம், ஆனால் ஒரு சில பதில்கள் அனைவருக்கும் பொருந்தும். சிங்களம் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு புதிய கலாச்சாரம் சார் உலகத்திற்கான திறவுகோல் ஆகும். இரண்டாம் மொழி சிங்களம் கற்பதனால் ஏற்படும் சில பயன்களை பார்ப்போம். 1. கலாச்சாரத்தை இணைத்தல்: இலங்கையில், சிங்களம் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளும் முக்கியமானவை. சிங்களம் கற்பதன் மூலம், நீங்கள் சிங்கள கலாச்சாரத்தை, அவர்களின் பழக்கவழக்கங்களை, கலை மற்றும் இலக்கியத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். இது இரு இனங்களுக்குமிடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்த உதவும். 2. வேலை வாய்ப்புகள்: இலங்கையில் பல துறைகளில் சிங்கள மொழி அவசியம். சிங்களம் தெரிந்திருந்தால், நீங்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம் அல்லது உங்கள் தற்போதைய வேலையில் முன்னேறலாம். உதாரணமாக, சுற்றுலா, வணிகம் அல்லது அரசு சேவைகளில் சிங்கள மொழி அறிவு ஒரு பெரிய நன்மை தருவிக்கும் திறவுகோலாக உள்ளது. 3. அன்றாட வாழ்க்கை: நீங்கள் இலங்கையின் எந்தப் பகுதிக்கும் பயணம் செய்யும்போது, சிங்களம் தெரிந...

Basic Sinhala Reading In Tamil

Image
Basic Sinhala Reading In Tamil சிங்கள மொழியை பயில்வது மிக மிக இலகுவான காரியங்களில் ஒன்றாகும். ஆம். காரணம் எமது தமிழ் மொழியைப் போன்றே சிங்கள மொழியிலும் பல்வேறுபட்ட ஒற்றுமைகள் காணப்படுகின்றன. தமிழை தாய் மொழியாக கொண்ட எமக்கும் சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்ட எமது சிங்கள சகோதரர்களுக்கும் பல்வேறு பட்ட ஒற்றுமைகளை தமிழ் மொழியும் சிங்கள மொழியும் ஏற்படுத்துகின்றன. நாம் தற்போது வாசிப்பு பயிற்சியை மேற்கொள்ள முயல்வோம். உங்களுக்கு சிங்கள மொழிக்கான தமிழ் உச்சரிப்புக்களை முடிந்த அளவு துல்லியமாக கொடுக்க முயற்சி செய்துள்ளேன். கீழ்வரும் பகுதியானது ஓர் பாடசாலை உரையாடலை அடிப்படையாக யெகண்டதாகும்.  ආයුබෝවන් ළමයි .- ஆயுபோவன் ளமயி என்று இதன் உச்சரிப்பு அமையும்.  இதன் அர்த்தம் வணக்கம் பிள்ளைகள் என்பதாகும்.  ஆயுபோவன் (ආයුබෝවන්)  என்றால் வணக்கம்.  ளமயி (ළමයි) என்றால் பிள்ளைகள். ආයුබෝවන් ගුරුතුමී .- ஆயுபோவன் குறுதுமி  என்று இதன் உச்சரிப்பு அமையும்.   இதற்கு வணக்கம் ஆசிரியயை என்று அர்த்தம் .   குறுதுமி ( ගුරුතුමී) என்றால் ஆசிரியயை-பெண்பால் என்றும்  குறுதுமா என்றால் ஆசிர...