Sinhala articles with Sinhala and Tamil vocabulary guides

Sinhala articles with Sinhala and Tamil vocabulary guides

           மொழி என்பது மனிதர்களை இணைக்கும் வலிமையான பாலமாக செயலாற்றுகின்றது. இலங்கையின் இரு முக்கிய மொழிகளான தமிழ் மற்றும் சிங்கள மொழிகளைக் கற்றுக்கொள்வது நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் தேசிய ஒற்றுமையை வளர்க்கும் முக்கிய வழிகளில் ஒன்றாகும்.  இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிங்களக் கட்டுரைகள், குறிப்பாக சிங்களத்தை இரண்டாம் மொழியாகக் கற்கும் தமிழ் மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சுயமாக மொழியைக் கற்க விரும்புவோர் ஆகியோரின் தேவைகளை மனதில் கொண்டு எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளன.

                 Sinhala articles with Sinhala and Tamil vocabulary guides இந்த நூலை கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பின் (Link) மூலம் நீங்கள் எளிதாகப் பார்வையிடலாம். மேலும், சிங்கள மொழியை அனைத்து பரிமாணங்களிலும் திறம்படக் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு இந்த நூல் சிறந்த கற்றல் வழிகாட்டியாக அமையும்.

Sinhala articles with Sinhala and Tamil vocabulary guides

                சிங்களக் கட்டுரைகளைப் பொறுத்தவரை, கட்டுரைகள் மட்டுமே தொகுக்கப்பட்ட தனித்துவமான நூல்கள் மிகவும் அரிதாகக் கிடைக்கின்றன. பொதுவாக, பாடநூல்களில் இடம்பெறும் சில கட்டுரைகளையே நாம் கற்கும் வாய்ப்பைப் பெறுகிறோம். அதற்கு அப்பால், சிங்களக் கட்டுரைகளை முறையாகப் பயில உதவும் தரமான கற்றல் வளங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.

                    குறிப்பாக, சிங்களத்தை இரண்டாம் மொழியாகக் கற்கும் தமிழ் மாணவர்களுக்கு இது ஒரு பெரிய சவாலாக உள்ளது. அந்தக் குறையைப் போக்கும் நோக்கில், இந்த நூல் எளிய மொழிநடையுடனும் பயனுள்ள கட்டுரைகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கள மொழித் திறனை மேம்படுத்துவதோடு, கட்டுரை எழுதும் திறனையும் வளர்த்துக்கொள்ள இந்த நூல் சிறந்த துணையாக இருக்கும்.

            ஒவ்வொரு கட்டுரையும் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் புதிய சொற்களைக் கற்றுக்கொள்வதுடன், வாக்கிய அமைப்பு, இலக்கணப் பயன்பாடு மற்றும் கருத்துக்களை சிங்களத்தில் தெளிவாக வெளிப்படுத்தும் திறனையும் மேம்படுத்த முடியும். ஒவ்வொரு கட்டுரைகளின் இறுதியிலும் முக்கியச் சொற்களின் தமிழ் விளக்கங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால், கற்றல் மேலும் எளிமையாக அமையும்.

                இந்த நூல், சிங்கள மொழியில் எழுதும் மற்றும் பேசும் திறனை வளர்க்கும் பயனுள்ள கையேடாகவும் அமையும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இந்த நூல் தமிழ் மாணவர்களின் சிங்கள மொழிப் பயணத்தில் சிறந்த துணையாக இருந்து, அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் மொழித் திறன் வளர்ச்சிக்கும் பயனளிக்கட்டும் என மனமார வாழ்த்துகிறேன்.

Sinhala articles with Sinhala and Tamil vocabulary guides

Comments

Popular posts from this blog

New Year Wishes in Sinhala, English and Tamil

Christmas wishes in Sinhala, English and Tamil

Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil