முன்னுரை
முன்னுரை
மொழி என்பது மிக முக்கியமான மற்றும்
மனிதனுக்கு அத்தியாவசியமான ஓர் கருத்துப் பரிமாற்ற ஊடகமாகும். காரணம் மொழி வளர்ச்சிபெற்ற
பின்னரான மனித சமூகத்தின் வளர்ச்சி மற்றும் பரிணாமம் மிகப்பெரியதும் மிகத் துரிதமானதுமாகும்.
சிங்கள மொழி என்பது இலங்கையைப் பொறுத்தமட்டில்
பெரும்பான்மையான மக்களால் உபயோகிக்கப்படும் ஓர் ஊடக மொழியாகும். இதைத்தவிர சிங்கள மக்கள்
செறிந்து வாழும் பல்வேறு உலக நாடுகளிலும் சிங்கள மொழியின் தேவை அவசியமானதாகும்.
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எமக்கு
சிங்கள மொழியானது இரண்டாம் மொழியாக இலங்கையில் காணப்படுகின்றது. தமிழைத் தாய்மொழியாகக்
கொண்ட எமக்கு சிங்கள மொழியானது மிக இலகுவான ஓர் கற்றல் மற்றும் புரிந்துணர்வு மொழி
என்பதனை நீங்கள் கருத்தில் கொள்ளுங்கள். காரணம் சிங்கள மொழியும் தமிழ் மொழியும் அடிப்படையில்
பல்வேறுபட்ட ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. இதனால் எமக்கு தமிழ் மொழியைப் போலவே சிங்கள மொழியையும்
மிக இலகுவாகக் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த மனத்திடனை முதலில் நீங்கள் உருவாக்கிக்
கொள்ளுங்கள். காரணம் மனதின் திடனே கற்றலின் ஆரம்பம்.
இந்த “சிங்களம் கற்போம் – வழிகாட்டி நூல்”
என்ற தலைப்பை உடைய நூலில் சிங்கள மொழியை எவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும் என்ற வழிகாட்டிப்
பதிவுகளும், சிங்கள மொழியின் மிக அத்தியாவசியமான வழிகாட்டிக் குறிப்புக்களும் தரப்பட்டுள்ளன.
இதன் ஊடாக நீங்கள் மிக மிக இலகுவாக சிங்கள மொழியைக் கற்றுக்கொள்ளலாம். அது மாத்திரமன்றி
நீங்கள் சிங்களம் கற்பதற்கான மிக முக்கிய உந்துதலாகவும், புதிய கற்றல் அணுகுமுறையை
உங்களுக்கு தந்து உதவும் ஓர் ஊடகமாகவும் இது அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இந்நூலின் சிங்கள மொழி என்னறால் என்ன
என்பதைப்பற்றிய விளக்கம் முழுமையாக தரப்பட்டுள்ளது. காரணம் எம்மில் பலர் சிங்கள மொழியை
கற்காது தட்டிக்களிக்கக் காரணம் சிங்கள மொழி எப்படிப்பட்டது என்ற அடிப்படைப் புரிதல்
இல்லாமையே ஆகும். அடுத்து எப்படிச் சிங்களம் கற்ற வேண்டும் என்ற அடிப்படை வழிகாட்டல்கள்
தரப்பட்டுள்ளன. காரணம் பலரும் சிங்கள மொழியை மனனம் செய்து ஒப்பிக்கும் நடைமுறை ஊடாகவே
சிங்கள மொழியை கற்க முனைகின்றனர். இது முற்றிலும் தவறான ஓர் நடைமுறையாகும். மனனம் செய்து
ஒப்பிக்கும் நடைமுறையானது கணிதத்தரவுகளை குறிப்பாக வாய்ப்பாடுகளை கற்க உதவுமே தவிர
நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொழிசார் விடயங்களிற்கு இது பொருத்தமானதாக அமையாது. எனவே இந்த கற்பித்தல் முறையை மாற்றி சரியான கற்பித்தல்
நடைமுறைகளை பின்பற்றுவதற்கான அடிப்படைக் குறிப்புக்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
சிங்கள மொழியினதும் தமிழ் மொழியினதும்
ஒற்றுமைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். குறிப்பாக சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழியில்
காணப்படும் எழுத்துக்களின் ஒற்றுமை, சொற்களுக்கு இடையிலான ஒற்றுமை என பல விடயங்களைப்
பற்றி இதில் கலந்துரையாடல் செய்துள்ளேன். இதனூடாக நீங்கள் சிங்கள மொழியை மிக இலகுவாக
கற்க வாய்ப்பு ஏற்படும்.
அடிப்படையான சிங்கள சொற்கள் மற்றும் அவற்றிற்கான அர்த்தங்களை விளக்கிக் கூறியுள்ளேன்.
அத்துடன் ஒவ்வொரு சொல்லுக்குமான உச்சரிப்பு, அர்த்தம், வசன உருவாக்கம் என ஆழமாக குறிப்பிட்டுள்ளேன்.
காரணம் சொற்களை மட்டும் தந்து சென்றால் அது அகராதியைப்போல ஆகிவிடும். இந்நூலை நான்
ஓர் பூரண வழிகாட்டியாக உருவாக்க முனைந்துள்ளேன்.
அடிப்படைச் சிங்கள வசன அமைப்பை பற்றியும்
எவ்வாறாக நாம் வசனங்களை அமைக்கலாம் என்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். இது உங்களுக்கான
பேச்சு சிங்கள பயிற்சிக்கு மிக உறுதுணையாக அமையும்.
இந்நூல் சிங்கள மொழியை கற்ற விரும்பும்
உங்கள் அனைவருக்கும் உதவிகரமான ஓர் வழிகாட்டியாக அமையும் என நான் நம்புகின்றேன்.
இப்படிக்கு
ஆசிரியர்
Comments
Post a Comment