அடிப்படைச் சிங்கள எழுத்துக்கள்

அடிப்படைச் சிங்கள எழுத்துக்கள்

சிங்கள எழுத்துக்கள்

                டிப்படைச் சிங்கள எழுத்துக்கள் என்ற இப் பகுதியில் சிங்கள எழுத்துக்கள் பற்றி முழுமையாகக் காண்போம்.

                தமிழ் மொழியைப் போன்றே சிங்கள மொழியிலும் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என்றவாறு காணப்படுகின்றன.

                தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் 12 உம் மெய் எழுத்துக்கள் 18 உம் காணப்படுகின்றன. 216 உயிர் மெய் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இதைத்தவிர ஆயுத எழுத்து என “ஃ” என்ற எழுத்தும் காணப்படுகின்றது. ஆகவே மொத்தமாக 247 எழுத்துக்கள் தமிழ் மொழியில் உள்ளன.  இதனைப்போன்றே சிங்கள மொழியிலும் காணப்படுகின்றன.

                சிங்கள மொழியில் உயிர் எழுத்துக்கள் 14 காணப்படுகின்றன.  35 மெய் எழுத்துக்கள் காணப்படுகின்றன. எனவே 490 எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்களாக தோராயமாகக் காணப்படுகின்றன. இதனைத்தவிர தமிழைப்போன்றே வட மொழி எழுத்துக்களும் காணப்படுகின்றன. நான் மேலே குறிப்பிட்ட தொகை தோராயமானதும் நாம் அடிக்கடி பயன்படுத்தும் எழுத்துக்களின் எண்ணிக்கையும் ஆகும். இதனைத்தவிர பல எழுத்துக்கள் காணப்படுகின்றன. ஆகவே எண்ணிக்கை மாறுபடும். எழுத்துக்கள் பற்றி தனியாக கற்கும்போது அவற்றைக் காணலாம். இந்த எழுத்துக்கள் முழுவதையும் எவ்வாறு நினைவில் வைத்திருப்பது என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.

                சித்திரமும் கைப்பழக்கம் என்பதைப்போல பழகப் பழக நாம் எழுத்துக்களைக் கற்றுக்கொள்ளலாம். அடிப்படையாக எவ்வாறு எழுத்துக்கள் உருவாகின்றன என்பதனைப் புரிந்து கொண்டால் மிகுதி அனைத்தும் மிக இலகுவாக எமக்கு புரிந்து விடும்.

 

சிங்கள உயிர் எழுத்துக்கள்

 

தமிழ் எழுத்து

 

සිංහල எழுத்து

         I.             

-

      II.             

-

    III.             

அ+எ (தமிழ் மொழியில் இல்லை)

-

     IV.             

அ+ஏ (தமிழ் மொழியில் இல்லை)

-

       V.             

-

     VI.             

-

  VII.             

-

VIII.             

-

     IX.             

-

       X.             

-

     XI.             

-

  XII.             

-

XIII.             

-

 XIV.             

-

ඖ / ඔෞ

 

மேலே குறிப்பிட்டிருப்பது தமிழ் எழுத்துக்களுக்கு ஒப்பான சிங்கள எழுத்துக்கள் ஆகும். இதில் முறையே III, IV ஆகிய இலக்கமிடப்பட்ட எழுத்துக்களைக் கவனித்துப்பாருங்கள். இவை தமிழில் இல்லாத ஆனால் சிங்கள மொழியில் காணப்படும் எழுத்துக்கள் ஆகும். , என்பன சிங்கள மொழியைப் பொறுத்தவரையில் தனித்தனி எழுத்துக்களாகக் காணப்படுகின்றன. இந்த எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் காணப்படுகின்றன. இந்த எழுத்துக்களை உச்சரிக்கும்போது நாம் குறில் மற்றும் நெடில் உச்சரிப்புக்களை கவனத்தில் கொள்ள வேண்டும். எழுத்துக்களை மாத்திரமன்றி வசனங்களை உச்சரிக்கும்போதும் இந்த எழுத்துக்களின் உச்சரிப்பு முறையை தெளிவாக உச்சரிக்க வேண்டும். காரணம் ஓர் சிறிய தவறான எழுத்து உச்சரிப்புப் பிழை முழு வசன அர்த்தத்தையும் மாற்றிவிடக்கூடும்.

                உயிர் எழுத்துக்கள் சிங்கள மொழியைப் பொறுத்த அளவில் பெரும்பாலும் ஓர் வசனத்தின் ஆரம்பத்தில் வரும் அல்லது வசனத்தின் இடையே வரும். பொதுவாக ஓர் வசனத்தின் இறுதி எழுத்தாக வருவது அரிதாகும்.

கீழே தரப்பட்டுள்ள உதாரணத்தைக் கவனியுங்கள். அதில் ஓர் வசனம் உருவாகுவதற்கு எவ்வாறாக எழுத்துக்கள் சேர்க்கப்படுகின்றன என்ற விளக்கத்தைத் தருகின்றன.

ර්-=රු ඔරුව ඔ+ර්++ව්+
ද්-=දැ                                උදැල්ල                         +ද්++ල්+

ග්-=ගි                                     ගිනි                                   ග්++ න්+

மேலே உள்ள உதாரணங்களை தமிழில் நோக்குவோம்.

Ø  ஒருவ   àஒ+ர்+உ+வ்+அ

Ø  உதல்லàஉ+த்+அ+ல்+ல

Ø  கினி     àக்+இ+ன்+இ

                தமிழில் உள்ள உதாரணங்களை நோக்குங்கள். அதில் எவ்வாறாக உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய்  எழுத்துக்கள் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கி ஓர் வசனமாக உண்டாக்கின்றது என்பதை காட்டுகின்றது. இதில் இருந்து உயிர் மற்றும் மெய் எழுத்துக்களின் பயன்பாட்டை அறிந்திருப்பீர்கள்.

                கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைக் கவனித்துப் பாருங்கள். அவை முறையே சிங்கள மொழியில் உள்ள உயிர் எழுத்துக்களை குறித்து நிற்கின்றன. அதன் பின்னர் உள்ள பகுதி தரப்பட்ட உயிர் எழுத்துக்களுக்கு ஒப்பான மெய்யெழுத்க்களையும் சேர்த்து எழுதும்போது நாம் பயன்படுத்தும் குறியீடுகளையும் குறிப்பிடுகின்றது. அதற்கு அடுத்த பகுதியானது அந்த எழுத்துக்களுக்கான சிங்கள பெயர்களை குறிக்கின்றது. குறிப்பாக சிங்களப் பெயர்களைக் குறிக்கின்றது. மற்றய பகுதியில் அந்த குறியீடுகளுக்கு ஒப்பான தமிழ் உதாரணங்கள் தரப்பட்டுள்ளன.

சிங்கள உயிர் எழுத்துக்கள், குறியீடுகள், குறியீடுகளின் பெயர்கள் மற்றும் உதாரணங்கள் என்பன தரப்பட்டுள்ளன.

இதற்கு குறியீடு இல்லை. எனவே சாதாரண மெய் எழுத்துக்களுடன் சேர்ந்து எழுத்துக்கள் உருவாகும். உதாரணம்: විය, ජයන,

 

– ා – இந்தக் குறியீடு ඇලපිල්ල (அலபில்ல) என அழைக்கப்படும். 

உதாரணம்: කා, රාජිත, මාලය

 

– ැ – இந்தக் குறியீடு කෙටි ඇලපිල්ල (கெடி அலபில்ல) என அழைக்கப்படும்.   

உதாரணம்: කැ, පැ

 

– ෑ – இந்தக் குறியீடு දිග ඇලපිල්ල (திக அலபில்ல) என அழைக்கப்படும்.    

உதாரணம்: කෑම්,

 

– ි – இந்தக் குறியீடு ඉස්පිල්ල (இஸ்பில்ல) என அழைக்கப்படும்.   

 உதாரணம்: කිතුල, මඬිති, පිහිරි

 

– ී – இந்தக் குறியீடு දිග ඉස්පිල්ල (திக இஸ்பில்ல) என அழைக்கப்படும்.     

உதாரணம்: කීර්තිය, නීති

 

– ු – இந்தக் குறியீடு කෙටි පාපිල්ල (கெடி பாபில்ல) என அழைக்கப்படும்.    

உதாரணம்: තුෂාර, වතුර

 

– ූ – இந்தக் குறியீடு දිග පාපිල්ල (திக பாபில்ல) என அழைக்கப்படும்.    

உதாரணம்: කූ, රූ

 

– ෙ – இந்தக் குறியீடு කොම්බුව (கொம்புவ) என அழைக்கப்படும்.    

உதாரணம்: නෙ, මෙ, පෙ

 

– ේ – இந்தக் குறியீடு කොම්බුව සහ දිග සලකුණ (கொம்புவ சக திக சலகுண) என அழைக்கப்படும்.    

உதாரணம்: වේ, සේ, දේ

 

– ෛ – இந்தக் குறியீடு කොම්බුව දෙක (கொம்புவ தெக) என அழைக்கப்படும்.

உதாரணம்: වෛද්‍ය, වෛ, වෛභව

 

– ො – இந்தக் குறியீடு කොම්බුව සහ ඇලපිල්ල (கொம்புவ சக அலபில்ல) என அழைக்கப்படும். உதாரணம்: පො, කො, සො

 

– ෝ – இந்தக் குறியீடு කොම්බුව සහ දිග සලකුණ සමග ඇලපිල්ල (கொம்புவ சக திக சலகுண சமக அலபில்ல) என அழைக்கப்படும்.

உதாரணம்: දෝ, හෝටල්

 

– ෞ – இந்தக் குறியீடு කොම්බුව සහ යනුනු කීන (கொம்புவ சக யனுனு கீன) என அழைக்கப்படும்.

உதாரணம்: ෂධ, කෞතුක, සෞඛ්‍ය

 

 

சிங்கள மெய் எழுத்துக்கள்

                சிங்கள மெய் எழுத்துக்களின் வரிசை கீழே தரப்பட்டுள்ளது. அதன்படி சில எழுத்துகளுக்கு அதாவது ஒரு எழுத்திற்கே இரண்டு அல்லது மூன்று எழுத்துக்கள் எழுதப்படுவதனை அவதானித்துப் பாருங்கள். குறிப்பாக 5 ஆம் இலக்கமிடப்பட்ட எழுத்தை கவனித்துப்பாருங்கள். இந்த உச்சரிப்பில் எமக்கு கிட்டத்தட்ட மூன்று சிங்கள எழுத்துக்கள் உள்ளன. இவ்வாறாக சில எழுத்துக்கள் தமக்கே உரிய தனித்தன்மையுடன் காணப்படும் என்பது தெளிவாகின்றது. கீழ்வரும் பகுதியில் உங்களுக்கு மெய் எழுத்துக்களுக்கு சார்பான உயிர்மெய் எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன. உதாரணமாக க் எனும் மெய் எழுத்து வர வேண்டிய இடத்தில் உங்கள் கற்றலை இலகுவாக்க க என தந்துள்ளேன்.

 

 

தமிழ் எழுத்து

 

சிங்கள எழுத்து

 

உச்சரிப்பு

(1)      

-

-

ka

(2)      

க்ஹ

-

-

kha

(3)      

க / g

-

-

ga

(4)      

ங்ஹ

-

-

gha

(5)      

ங் + க

-

/ /

-

ga

(6)      

-

-

ca / cha

(7)      

ச்ஹ

-

-

chha

(8)      

-

-

ja

(9)      

ஜ்ஹ

-

-

jha

(10)   

-

-

ña

(11)   

-

-

a

(12)   

ட்ஹ

-

-

ha

(13)   

-

-

a

(14)   

ட்ஹ

-

-

ha

(15)   

-

-

a

(16)   

-

-

ta

(17)   

த்ஹ

-

-

tha

(18)   

-

-

da

(19)   

த்ஹ

-

-

dha

(20)   

-

-

na

(21)   

-

-

pa

(22)   

ப்ஹ

-

-

pha

(23)   

-

-

ba

(24)   

ப்ஹ

-

-

bha

(25)   

-

-

ma

(26)   

-

-

ya

(27)   

-

-

ra

(28)   

-

-

la

(29)   

-

-

va

(30)   

-

-

śa

(31)   

-

-

a

(32)   

-

-

sa

(33)   

-

-

ha

(34)   

-

-

a

(35)   

ஃப

-

-

fa

 

 

 

 

உயிர் மெய் எழுத்துக்கள்


                சிங்கள மொழியில் தமிழ் மொழியைப்போன்றே உயிர் மெய் எழுத்துக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்களின் கலவையாக இவை காணப்படுகின்றன. கீழே உங்களுக்காக சில முக்கியமான சிங்கள எழுத்துக்களை தந்துள்ளேன். இவை உங்களது மேலதிக அறிவு மற்றும் கற்றலை ஊக்கப்படுத்தவே ஆகும். இதில் உதாரணமாக க என எழுதப்பட்டு அதன் கீழ் பல எழுத்துக்கள் தரப்பட்டிருக்கும். நான் ஏற்களவே குறிப்பிட்டதைப்பால சிங்கள எழுத்துக்கள் ஒலி வடிவங்களுக்கெனத் தனித்தனியான எழுத்துரு வடிவங்களைக் கொண்டுள்ளன. எனவே க என குறிப்பிடும்போது க வரிசையில் உள்ள ஒலி வடிவங்களில் மாற்றம் காணப்படும் பெரும்பாலான எழுத்துக்களைத் தந்துள்ளேன். இவற்றின் தொனி வடிவங்கள் மாறுபடக்கூடியன.

 

 

 

 

අ ආ ඇ ඈ ඉ ඊ උ ඌ එ ඒ ඓ ඔ ඕ ඖ

 

 

 

 

ක – කා – කැ – කෑ – කි – කී – කු – කූ – කෙ – කේ – කෛ – කො – කෝ – කෞ

 

ඛ – ඛා – ඛැ – ඛෑ – ඛි – ඛී – ඛු – ඛූ – ඛෙ – ඛේ – ඛෛ – ඛො – ඛෝ – ඛෞ

 

ග – ගා – ගැ – ගෑ – ගි – ගී – ගු – ගූ – ගෙ – ගේ – ගෛ – ගො – ගෝ – ගෞ

 

ඝ – ඝා – ඝැ – ඝෑ – ඝි – ඝී – ඝු – ඝූ – ඝෙ – ඝේ – ඝෛ – ඝො – ඝෝ – ඝෞ

 

ඟ (ඞ) – ඞා – ඞැ – ඞෑ – ඞි – ඞී – ඞු – ඞූ – ඞෙ – ඞේ – ඞෛ – ඞො – ඞෝ – ඞෞ

 

ච – චා – චැ – චෑ – චි – චී – චු – චූ – චෙ – චේ – චෛ – චො – චෝ – චෞ

 

ඡ – ඡා – ඡැ – ඡෑ – ඡි – ඡී – ඡු – ඡූ – ඡෙ – ඡේ – ඡෛ – ඡො – ඡෝ – ඡෞ

 

ජ – ජා – ජැ – ජෑ – ජි – ජී – ජු – ජූ – ජෙ – ජේ – ජෛ – ජො – ජෝ – ජෞ

 

ඣ – ඣා – ඣැ – ඣෑ – ඣි – ඣී – ඣු – ඣූ – ඣෙ – ඣේ – ඣෛ – ඣො – ඣෝ – ඣෞ

 

ඤ – ඤා – ඤැ – ඤෑ – ඤි – ඤී – ඤු – ඤූ – ඤෙ – ඤේ – ඤෛ – ඤො – ඤෝ – ඤෞ

 

ට – ටා – ටැ – ටෑ – ටි – ටී – ටු – ටූ – ටෙ – ටේ – ටෛ – ටො – ටෝ – ටෞ

 

ඨ – ඨා – ඨැ – ඨෑ – ඨි – ඨී – ඨු – ඨූ – ඨෙ – ඨේ – ඨෛ – ඨො – ඨෝ – ඨෞ

 

ඩ – ඩා – ඩැ – ඩෑ – ඩි – ඩී – ඩු – ඩූ – ඩෙ – ඩේ – ඩෛ – ඩො – ඩෝ – ඩෞ

 

ඪ – ඪා – ඪැ – ඪෑ – ඪි – ඪී – ඪු – ඪූ – ඪෙ – ඪේ – ඪෛ – ඪො – ඪෝ – ඪෞ

 

ණ – ණා – ණැ – ණෑ – ණි – ණී – ණු – ණූ – ණෙ – ණේ – ණෛ – ණො – ණෝ – ණෞ

 

ත – තා – තැ – තෑ – ති – තී – තු – තූ – තෙ – තේ – තෛ – තො – තෝ – තෞ

 

ථ – ථා – ථැ – ථෑ – ථි – ථී – ථු – ථූ – ථෙ – ථේ – ථෛ – ථො – ථෝ – ථෞ

 

ද – දා – දැ – දෑ – දි – දී – දු – දූ – දෙ – දේ – දෛ – දො – දෝ – දෞ

 

ධ – ධා – ධැ – ධෑ – ධි – ධී – ධු – ධූ – ධෙ – ධේ – ධෛ – ධො – ධෝ – ධෞ

 

න – නා – නැ – නෑ – නි – නී – නු – නූ – නෙ – නේ – නෛ – නො – නෝ – නෞ

 

ප – පා – පැ – පෑ – පි – පී – පු – පූ – පෙ – පේ – පෛ – පො – පෝ – පෞ

 

ඵ – ඵා – ඵැ – ඵෑ – ඵි – ඵී – ඵු – ඵූ – ඵෙ – ඵේ – ඵෛ – ඵො – ඵෝ – ඵෞ

 

බ – බා – බැ – බෑ – බි – බී – බු – බූ – බෙ – බේ – බෛ – බො – බෝ – බෞ

 

භ – භා – භැ – භෑ – භි – භී – භු – භූ – භෙ – භේ – භෛ – භො – භෝ – භෞ

 

ම – මා – මැ – මෑ – මි – මී – මු – මූ – මෙ – මේ – මෛ – මො – මෝ – මෞ

 

ය – යා – යැ – යෑ – යි – යී – යු – යූ – යෙ – යේ – යෛ – යො – යෝ – යෞ

 

ර – රා – රැ – රෑ – රි – රී – රු – රූ – රෙ – රේ – රෛ – රො – රෝ – රෞ

 

ල – ලා – ලැ – ලෑ – ලි – ලී – ලු – ලූ – ලෙ – ලේ – ලෛ – ලො – ලෝ – ලෞ

 

ව – වා – වැ – වෑ – වි – වී – වු – වූ – වෙ – වේ – වෛ – වො – වෝ – වෞ

 

ශ – ශා – ශැ – ශෑ – ශි – ශී – ශු – ශූ – ශෙ – ශේ – ශෛ – ශො – ශෝ – ශෞ

 

 

 

 

 

 

 


Comments

Popular posts from this blog

Christmas wishes in Sinhala, English and Tamil

Past and Present sentence in Sinhala and Tamil (කළා-Kala) Part 1- Basic Sinhala in Tamil

Sinhala Letter Tips In Tamil