சிங்கள மொழி எப்படிக் கற்க வேண்டும்?
சிங்கள மொழி எப்படிக் கற்க வேண்டும்? சிங்கள மொழி என்றால் என்ன? சி ங்கள மொழி என்பது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் மொழியாகும். வங்காள மொழி , பாளி , சமஸ்கிருதம் போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டதும் மலையாள மொழியின் அசைவு நுட்பங்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டதுமான ஓ ர் மொழியாகும். இது தமிழ் மொழியுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. காரணம் தமிழ் மொழியின் பல சொற்கள் சிங்கள மொழியில் அப்படியே உருமாற்றம் பெறாது பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக அம்மா என்றால் சிங்கள மொழியிலும் அம்மா என்றே அழைக்கின்றனர். அக்கா என்றால் சிங்கள மொழியிலும் அக்கா என்றே அழைக்கின்றனர். எனவே சிங்கள மொழி என்பது கற்க அல்லது புரிந்துகொள்ள கடினமான ஓர் மொழி அல்ல. அதிலும் குறிப்பாக தமிழ் மொழி தெரிந்த எமக்கு சிங்கள மொழி கற்பது மிக மிக இலகுவான காரியம் ஆகும். சிங்கள மொழி கற்பதால் ஏற்படும் பயன்கள். ஓ ர் விடயத்தை நாம் கற்றுக்கொள்ள ஏதோ காரணம் காணப்படும். குறிப்பாக அது எமக்கு ஏதோ ஒரு வகையில் உதவுகின்றதாக இருப்பதாலேயே நாம் கற்றலை மேற்கொள்கின்றோம். உதாரணமாக...