Posts

Showing posts from March, 2026

சிங்களத்தில் நிகழ்காலச் சொற்கள்

சிங்களத்தில் நிகழ்காலச் சொற்கள்  எந்த மொழியை நாம் எடுத்துக்கொண்டாலும் காலங்கள் எனப்படுபவை மிக முக்கியமானவை. காரணம் நாம் காலங்களைக் கருத்திற் கொண்டே எந்த மொழியிலும் கருத்துக்களை வெளியிடுகின்றோம். சுருக்கமாகச் சொல்லப்போனால் காலங்களைக் கருத்திற் கொண்டு கருத்துக்களை வெளியிடுதலே  சரியாக மொழியைப் பயன்படுத்துவதற்கும், அதன் கருத்துக்களைச் சரியாக குறிப்பிடவும் உதவி நிற்கின்றன. அந்த வகையில் ஏனைய மொழிகளைப்போன்று சிங்கள மொழியில் காலங்கள் (Tenses) மிகத் தெளிவாக அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று நிகழ்காலம் (Present Tense). இப் பகுதியில் நாம் சிங்கள மொழியின் நிகழ்கால சொற்கள், அவற்றின் அமைப்பு மற்றும் பயன்பாடு பற்றி விரிவாகப் பார்ப்போம். 1. நிகழ்காலம் என்றால் என்ன? நிகழ்காலம் என்பது தற்போது நடைபெறும் செயலை அல்லது வழக்கமாக நடைபெறும் செயலை குறிக்கும் காலம் ஆகும். இந்த நிகழ்காலத்தை நான் உங்களிடம் முதலில் குறிப்பிடக் காரணம் நாம் அடிக்கடி பயன்படுத்தும் மற்றும் மிக முக்கியமான காலமாக இது காணப்படுகின்றது. இது பேச்சுச் சிங்களம் மாத்திரமன்றி எழுத்துச் சிங்களத்திற்கும் மிக முக்கியமானதாகும்.  ...